புதிய வீட்டில் தட்ஸ்தமிழ்

Subscribe to Oneindia Tamil

அன்பு வாசகர்களே,

ஒன் இண்டியா (oneindia.in), இது தான் இனி உங்கள் தட்ஸ்தமிழின் புதிய வீடு!

தட்ஸ்தமிழ் என்பது 5 ஆண்டுகள் முன் நாங்கள் மிக நம்பிக்கையோடு தொடங்கிய பயணம். இணையம் மூலம் இதயங்களைஇணைக்க எடுத்த முயற்சி. டாட்.காம் பூம்-இல் தொடங்கிய எங்களின் குதூகலமான பயணத்துக்கு சவாலாய் வந்தது டாட்.காம்டூம்.

வர்த்தக இணையங்கள் சந்தித்த மகா சுனாமி அது. அதில், பல இணையத் தளங்கள் புரட்டிப் போடப்பட்டபோது, தடமேஇல்லாமல் தவிடுபொடியானபோது, நாமும் அந்த மகா அலையில் தடுமாறித் தான் போனோம்.

அந்தத் தடுமாற்றம் தோல்வியாக மாறாமல் தடுத்தது, வாசகர்களாகிய உங்கள் ஆதரவும், கால மாற்றத்துக்கு ஏற்பநிர்வாகரீதியில் நாங்கள் மேற்கொண்ட மாற்றங்களும் தான்.

தொடர்ந்த உங்கள் ஆதரவால் தட்ஸ்தமிழ் தனது ஏறுமுகமான பயணத்தைத் தொடர்ந்து, இப்போது அடுத்த கட்ட வளர்ச்சியைஎட்டிப் பிடித்திருக்கிறது.

கிரேனியம் இன்பர்மேசன் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிட்டெட் (greynium information technologies pvt. ltd) என்ற பெரியநிறுவனத்தின் சார்பிலான ஒன் இண்டியா என்ற புதிய குடையின் கீழ் தட்ஸ்தமிழ் இடம் பிடித்திருக்கிறது. எங்கள் சக மொழிஇணையத் தளங்களும் இனி ஒன் இண்டியாவின் கீழ் வரும்.

இனி, தட்ஸ்தமிழ்.ஒன்இண்டியா.இன் (tamil.oneindia.com) என்ற புதிய பெயரில் தட்ஸ்தமிழ் இயங்கும்.

உலகில் மிக வேகமான வளர்ச்சி காணும் மிகச் சில விஷயங்களில் இணையமும் ஒன்று. அதன் வேகத்துக்கு ஈடு கொடுத்து,மாற்றங்களை உள்-கிரகித்து, தேவையான மாற்றங்களைச் செய்து கொண்டு பயணித்தால் தான் இந்தத் துறையில் சர்வைவல்சாத்தியம்.

பிற வர்த்தக இணையங்கள் போல பெரிய பொருளாதாரப் பின்னணி ஏதும் இல்லாத நிலையில் சர்வைவல் ஆப் த பிட்டஸ்ட்என்ற தத்துவத்தில் தாக்குப் பிடித்த சில தளங்களில் தட்ஸ்தமிழும் ஒன்று.

அதில், தட்ஸ்தமிழுக்கு முதுகெலும்பாய் இருந்தது எங்கள் நிறுவனத்தின் வர்த்தகப் பிரிவு. அவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றி.

தட்ஸ்தமிழின் முதுகெலும்பு வர்த்தகப் பிரிவு என்றால் இதயம், இதன் செய்திப் பிரிவு. தமிழகத்திலும், தலைமையகமானபெங்களூரிலும், பிற பகுதிகளிலுமாக பரவி நிற்கும் எங்கள் செய்திப் பிரிவு நெட்-வொர்க்கின் பலமும் வேகமும் நீங்கள்அறிந்தது தான்.

உலகின் எந்த மூலையிலும் நடந்த மிக முக்கியமான நிகழ்வுகளை அதிகமான அளவில் தமிழில் பிரேக் செய்த இணையத் தளம்உங்கள் தட்ஸ்தமிழ் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆசிரியர் குழுவின் அதீத வேகமே இந்த பிரேக்கிங் நியூஸ்களைசாத்தியப்படுத்தியது. அவர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றி.

வர்த்தகரீதியிலான வெற்றியோடு முத்திரைச் செய்திகள்-தகவல்களால் வாசகர்களை வெல்லும் தட்ஸ்தமிழின் ஆக்கப்பூர்வமானபயணம் எப்போதும் போல் தொடரும், அதே வழக்கமான வேகத்துடன்.

மேலும் விரைவில் மிகப் பெரிய விரிவாக்கத்தையும் தட்ஸ்தமிழ் காணவுள்ளது என்பதை உங்களிடம் மகிழ்ச்சியுடன்தெரிவித்துக் கொள்கிறேன். அந்த மாற்றங்களை விரைவில் தளத்தில் காண்பீர்கள்.

வால்ட் விட்மென் சொன்னது போல,

The habit of giving only enhances the desire to give

இது தட்ஸ்தமிழுக்கும் பொருந்தும். விரிவாக்கப்படும் தட்ஸ்தமிழ் இனி அதிகமாக பயனுள்ள தகவல்களை உங்களுக்குத் தரும்.

இப்போது புதிய, பெரிய வீட்டில் குடியேறியிருக்கும் எங்களுக்கு உங்களின் வாழ்த்தும், யோசனையும் தொடர்ந்து தேவை.உங்கள் எண்ணங்களை, கருத்துக்களை எங்களுடன் எப்போதும் பகிர்ந்து கொள்ளலாம்.

எனது இணைய முகவரி :[email protected]

நட்புடன்,
ஏ.கே. கான்,
அசோசியேட் எடிட்டர்,
தட்ஸ்தமிழ்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+