மார்ச் 2ம் தேதி பிளஸ் டூ தேர்வு தொடக்கம்
சென்னை:
தமிழகத்தில் பிளஸ்டூ பொதுத் தேர்வு மார்ச் 2ம் தேதி தொடங்குகிறது.
இந்த ஆண்டுக்கான பிளஸ்டூ பொதுத் தேர்வு புதிய பாடத் திட்டத்தின்படிநடைபெறவுள்ளது. மார்ச் 2ம் தேதி தேர்வுகள் தொடங்குகின்றன. அன்று தமிழ் முதல்தாள் தேர்வு நடைபெறுகிறது.தேர்வு குறித்து அரசுத் தேர்வுகள் துறை இயக்குனர் ஜெகன்னாதன் இன்றுசெய்தியாளர்களிடம் பேசுகையில்,
இந்த ஆண்டு மொத்தம் 5,27,105 மாணவ, மாணவியர் தேர்வு எழுதுகிறார்கள். கடந்தஆண்டை விட கூடுதலாக 17,115 பேர் தேர்வு எழுதுகிறார்கள்.
மொத்தம் 1,570 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வுகளின்போதுபக்கத்து மாணவரின் விடைத்தாளை பார்த்து எழுதுவது, பிட் அடிப்பது,ஆள்மாறாட்டம் செய்வது உள்ளிட்ட றைகேடுகளில் ஈடுபடுவது கடுமையானகுற்றமாக கருதப்படும்.
அதுமாதிரி செய்து பிடிபடும் மாணவ, மாணவியர் நிரந்தரமாக பொதுத் தேர்வு எழுததடை விதிக்கப்படுவார்கள்.
முறைகேடுகளில் ஈடுபடுவதைத் தடுக்க பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.மொத்தம் 3,000க்கும் மேற்பட்ட தேர்வுக் கண்கணிப்பாளர்கள் பணியில்ஈடுபடுத்தப்படுவர்.
மார்ச் 16ம் தேதி முதல் ஏப்ரல் 15ம் தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணிநடைபெறும். அதன் பின்னர் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றார்.
நுழைவுத் தேர்வு குழப்பம், புதிய பாடத் திட்டம், தேர்தல் பிரச்சாரம் என ஏகப்பட்டநெருக்கடிகளுக்கு மத்தியில் பிளஸ் டூ மாணவர்கள் தேர்வை சந்திக்கிறார்கள் என்பதுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications