சென்னையில் விரைவில் இன்னொரு என்கெளண்டர்?
சென்னை:
சென்னை நகரின் பிரபல ரவுடியான நாகேந்திரனை சுட்டுப் பிடிக்க மாநகர காவல்துறை உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனவே எந்த நேரத்திலும் சென்னையிலோ அல்லது சென்னைக்கு அருகிலோ ஒரு என்கவுண்டர் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.சென்னை நகரை கடந்த 20 ஆண்டுகளாக கலக்கி வருபவன் ரவுடி நாகேந்திரன். ரவுடிகளின் தலைமையகமான சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவன்.
முக்கிய அரசியல் புள்ளிகளை கையில் போட்டுக் கொண்டு போலீஸாருக்கே பெரும் சவாலாக விளங்கியவன் நாகேந்திரன்.
ஒரு கொலை வழக்கில் கைதாகி ஆயுள் தண்டனை பெற்ற நாகேந்திரன், பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டான்.
ஆண்டுக்கு ஒருமுறை பரோரில் வெளியே வந்து சென்னையில் குடும்பத்தினருடன் தங்கி விட்டு மீண்டும் சிறைக்கு சென்று விடுவான்.
கடந்த பிப்ரவரி 3ம் தேதி, தனது மனைவி உடல் நலம் இல்லாமல் இருப்பதாக கூறி பரோலுக்கு விண்ணப்பித்தான். இதையடுத்து ஒரு மாதம் பரோலில் அவன் விடுதலையானான்.
தினமும் மாதவரம் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என அவனுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டது. ஆனால் வெளியே வந்த நாகேந்திரன் அப்படியே தலைமறைவாகி விட்டான்.
இதையடுத்து போலீஸார் நாகேந்திரனைத் தேடத் தொடங்கினர். அப்போது ஒரு முக்கிய தகவல் போலீஸாருக்குக் கிடைத்தது.
மனைவிக்கு உடல் நலம் சரியில்லை என்று நாகேந்திரன் கூறியது பொய், அதற்காக அவன் மனைவி என்று கூறி மருத்துவ சான்றிதழை தாக்கல் செய்தது உண்மையான மனைவி அல்ல, செட்டப் செய்யப்பட்ட வேறு ஒரு பெண் என போலீஸாருக்குத் தெரிய வந்தது.
இதையடுத்து நாகேந்திரனை பிடிக்கும் முயற்சிகள் தீவிரமடைந்தன. அவன் முட்டுக்காடு பகுதியில் மறைந்திருப்பதாக வந்த தகவலைத் தொடர்ந்து போலீஸார் அங்கு விரைந்தனர். ஆனால் அதற்குள் அவன் தப்பி விட்டான்.
தற்போது ஆந்திராவுக்கு தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே நாகேந்திரனை எப்படியும் பிடித்து விட வேண்டும் என்றும், தேவைப்பட்டால் சுட்டும் பிடிக்குமாறு மாநகர காவல்துறை உத்தரவிட்டுள்ளது. இதனால் என்கெளண்டர் மூலம் நாகேந்திரன் தீர்த்துக் கட்டப்படும் வாய்ப்பும் எழுந்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications