கல்லூரி மாணவர்கள் பயங்கர ரகளை: தடியடி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை அருகே காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். பொறியியல்கல்லூரியின் அங்கீகாரத்தை அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் ரத்து செய்துவிட்டதாக வெளியான தகவலையடுத்து மாணவர்கள் பெரும் ரகளையில்ஈடுபட்டனர்.

மாணவர்களைக் கலைக்க போலீஸார் தடியடி நடத்தினர். இதில் பல மாணவர்கள்படுகாயமடைந்தனர்.

காட்டாங்கொளத்தூரில், எஸ்.ஆர்.எம். நிகர்நிலைப் பல்கலைக்கழகம் உள்ளது. இங்குபல்வேறு கல்வி நறுவனங்கள் உள்ளன. அதில் பொறியியல் கல்லூரியின்அங்கீகாரத்தை அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் ரத்து செய்து விட்டதாகதகவல் பரவியது. இதனால் மாணவர்கள் குழப்பமடைந்தனர்.

இதையடுத்து கல்லூரி முதல்வர் வெங்கட்ரமணியைத் தொடர்பு கொண்ட அவர்கள்கல்லூரிக்கான அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு விட்டதா என கேட்டுள்ளனர்.

ஆனால் முதல்வரிடமிருந்து சரியான பதில் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.இதனால் மாணவர்கள் ஆத்திரமடைந்தனர்.

திங்கள்கிழமை இரவு அவர்கள் கல்லூரி வளாகத்தில் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.போலீஸார் வந்து அவர்களை சமாதானப்படுத்தி கலைந்து போகச் செய்தனர்.

இருப்பினும் மீண்டும் மாணவர்கள் நள்ளிரவுக்கு மேல் கூடி போராட்டத்தைத்தொடர்ந்தனர்.

இதையடுத்து கல்லூரி நிர்வாகம் போலீஸில் புகார் செய்தது. போலீஸார் விரைந்துவந்து மாணவர்களைக் கலைந்து போகக் கூறினர்.

ஆனால் போலீஸார் அதைக் கேட்கவில்லை, தொடர்ந்து கல்லூரி நிர்வாகத்தை எதிர்த்துகோஷமிட்டபடி இருந்தனர்.

இந் நிலையில் மாணவர்களில் சிலர் வன்முறையில் இறங்கினர். கல்லூரிக்குள் புகுந்தமாணவர்கள் அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர். கல்லூரி ஆய்வகம்இதில் பெரும் சேதமடைந்தது.

கம்ப்யூட்டர்கள் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள் அடித்து உடைக்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து போலீஸார் தடியடி நடத்தி மாணவர்களைக் கலைத்தனர்.கல்லூரியும், மாணவர் விடுதியும் மூடப்பட்டன. கல்லூரிக்கும் விடுமுறைவிடப்பட்டுள்ளது.

இந்த மோதலில் தனியார் தொலைக்காட்சி பெண் நிருபர் ஒருவர் உள்பட மாணவர்களசிலரும் படுகாயமடைந்தார்.

வன்முறையில் ஈடுபட்டு பொருட்களை உடைத்ததாக 9 மாணவர்களைப் போலீஸார்கைது செய்துள்ளனர். ரூ. 3 கோடி வரை சேதம் ஏற்பட்டிருப்பதாக கல்லூரி நிர்வாகம்கூறியுள்ளது.

இச் சம்பவம் காரணமாக காட்டாங்கொளத்தூரில் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது.கல்லூரி வளாகத்தில் அதிக அளவில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+