திமுக-மதிமுக இடையே மீண்டும் சிக்கல்?

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வெற்றி பெறக் கூடிய சாதகமான தொகுதிகளை திமுக ஒதுக்க தயக்கம் காட்டுவதால்மதிமுக தரப்பில் அதிருப்தி ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

தாங்கள் விரும்பும் தொகுதிகளின் எண்ணிக்கை மற்றும் தொகுதிகள் குறித்த விவரப்பட்டியலை கூட்டணிக் கட்சிகள் திமுக தலைவர் கருணாநிதியிடம் கொடுத்தன.

இந்தப் பட்டியலிலிருந்து ஒவ்வொரு கட்சிக்கும் எத்தனை தொகுதிகள்ஒதுக்கப்படலாம் என்பது குறித்து ஒவ்வொரு கட்சியாக அழைத்து கருணாநிதிஆலோசனை நடத்தி வருகிறார்.

முதலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் நேற்று பேசினார். திமுக 8தருவதாக கூறியது, ஆனால் 10க்குக் குறைந்தால் ஸாரி, என்று மார்க்சிஸ்டுகள் கூறிச்சென்றுள்ளனர்.

இதனால் பேச்சுவார்த்தை முடிவு ஏதும் எட்டப்படாமல் முடிவடைந்தது.

இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் கருணாநிதி ஆலோசனைநடத்துகிறார்.

இந் நிலையில் மதிமுகவுக்கு 23 தொகுதிகள் வரை ஒதுக்கப்படலாம் எனகூறப்படுகிறது. இந்தத் தொகுதிகளிலும், மதிமுக கோரிய தொகுதிகள்பெரும்பாலானவை இடம்பெறவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் மதிமுக தரப்பில் மீண்டும் அதிருப்தி தலை தூக்கியுள்ளதாக தெரிகிறது.

மதிமுக தரப்பில் மொத்தம் 40 தொகுதிகளின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தநாற்பது தொகுதிகளிலும் கடந்த தேர்தலில் மதிமுக அதிக அளவிலான வாக்குகளைப்பெற்றிருந்தது.

மேலும், பெரும்பாலான தொகுதிகளில் மதிமுக வேட்பாளர்கள் வாக்குகளைப்பிரித்ததால் திமுக வேட்பாளர்கள் தோல்வியைத் தழுவினர்.

இந்தத் தொகுதிகள் அனைத்துமே தங்களுக்கு சாதகமானவை என்பதால் இதிலிருந்தேதங்களுக்கான தொகுதிகளை ஒதுக்குமாறு வைகோ கோரியிருந்தார்.

ஆனால் 40 தொகுதிகளிலிருந்து அதிகபட்சம் 10 தொகுதிகளை மட்டுமே ஒதுக்கதிமுக முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மற்ற 13 தொகுதிகளும்மதிமுக கொடுத்த பட்டியலில் இல்லாதவை.

இதனால் மதிமுக தரப்பு அதிருப்தி அடைந்துள்ளது.

கடந்த தேர்தலில் ஆலந்தூர் தொகுதியில் மதிமுக வேட்பாளர் லவகுமார் 13,440வாக்குகள் பெற்றார். அந்தத் தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிட்டஆர்.எம்.வீரப்பன், 12,596 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார்.

அதேபோல, வில்லிவாக்கம் தொகுதியில், திமுக வேட்பாளர் நடிகர் நெப்போலியன்வெற்றி பெற்றார். ஆனால் அவரது வாக்கு வித்தியாசம் 9,230 மட்டுமே.அத்தொகுதியில் மதிமுக வேட்பாளர் சிவப்பிரகாசம் 12,112 வாக்குகள் பெற்றார்.

தாம்பரம் தொகுதியிலும் திமுக வேட்பாளர்தான் வெற்றி பெற்றார். ஆனால் அவரதுவெற்றி வித்தியாசம் 5,431 மட்டுமே. அத்தொகுதியில், மதிமுக வேட்பாளராகப்போட்டியிட்ட சோமு, 17,552 வாக்குகளைப் பெற்றார்.

செங்கல்பட்டு தொகுதியில் மதிமுக வேட்பாளராகப் போட்டியிட்ட இ.சத்யா 15,617வாக்குகள் பெற்றார். இத்தொகுதியில் திமுக வேட்பாளர் விஸ்வநாதன் 5,149வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார்.

பூந்தமல்லி தொகுதியில் மதிமுக வேட்பாளர் அந்திரிதாஸ் 17,628 வாக்குகள்பெற்றார். இத்தொகுதியில் திமுக வேட்பாளர் 2,316 வாக்குகள் வித்தியாசத்தில்தோற்றார்.

வாணியம்பாடி தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிட்ட ஹாரூன் ரஷீத்தோல்வியுற்றார். இத்தொகுதியில் மதிமுக வேட்பாளர் லட்சுமிகாந்தன் 7,724ஓட்டுக்கள் பெற்றார்.

இதேபோல திருப்பத்தூர், புவனகிரி, ரிஷிவந்தியம், தர்மபுரி, தொண்டாமுத்தூர்,அவினாசி, சிங்காநல்லூர், கோவை மேற்கு, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி,வால்பாறை, உடுமலைப்பேட்டை,

தாராபுரம், வெள்ளக்கோவில், பொங்கலூர், காங்கேயம், சத்தியமங்கலம்,பெரியகுளம், தேனி, போடிநாயக்கனூர், ஆண்டிப்பட்டி, சேடப்பட்டி, திருமங்கலம்,மதுரை மேற்கு, மதுரை மத்தி, மதுரை கிழக்கு, சமயநல்லூர்,

நத்தம், திண்டுக்கல், ஆத்தூர், வேடசந்தூர், கரூர், மருங்காபுரி, குளித்தலை,உப்பிலியாபுரம், முசிறி, லால்குடி, பெரம்பலூர், வரகூர், அரியலூர், திருச்சி 1, திருச்சி2, திருவெறும்பூர், பூம்புகார், குத்தாலம், திருவாரூர், பட்டுக்கோட்டை, ஓரத்தநாடு,பாபநாசம், திருமயம்,

புதுக்கோட்டை, ஆலங்குடி, திருப்பத்தூர், திருவாடானை, இளையாங்குடி, சிவகங்கை,அருப்புக்கோட்டை, சாத்தூர், விருதுநகர், சிவகாசி, விளாத்திகுளம், ஒட்டப்பிடாரம்,கோவில்பட்டி,

சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், கடையநல்லூர், ஆலங்குளம், திருநெல்வேலி,அம்பாசத்திரம், நான்குநேரி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, குளச்சல் ஆகியதொகுதிகளில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களின் தோல்வி அல்லதுகுறைந்த வாக்குகளில் வெற்றிக்கு மதிமுக வேட்பாளர்கள் காரணமாக இருந்துள்ளனர்.

இந்தத் தொகுதிகளில் இருந்து 23 தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்குமாறுகருணாநிதியிடம் வைகோ கோரியிருந்தார். இருப்பினும் இவற்றில் பெரும்பாலானதொகுதிகளை காங்கிரஸ் கட்சி கேட்பதால், மதிமுகவுக்கு இதிலிருந்து 10 தொகுதிகள்மட்டுமே ஒதுக்க இயலும் என திமுக தரப்பிலிருந்து பதில் போயுள்ளதாககூறப்படுகிறது.

இதனால் வைகோ அப்செட் ஆகியுள்ளார்.

குறிப்பாக கடந்த முறை நாஞ்சில் சம்பத் போட்டியிட்டு மயிரிழையில் தோல்வியைத்தழுவிய குளச்சல் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு (இங்கு திமுக வேட்பாளரை விடகூடுதல் வாக்குகள் பெற்றிருந்தார் சம்பத்) ஒதுக்க திமுக முடிவு செய்துள்ளதாகத்தெரிகிறது.

இதேபோல வைகோ பெல்ட் எனக் கருதப்படும் விருதுநகர், தூத்துக்குடி,திருநெல்வேலி மாவட்டத்தின் பல தொகுதிகள் இம்முறை மதிமுகவுக்கு கிடைக்காதுஎனவும் கூறப்படுகிறது.

இருப்பினும் கருணாநிதியும், வைகோவும் மீண்டும் சந்தித்துப் பேசவுள்ளதால்,அப்போது இப்பிரச்சினைக்கு முடிவு கட்டப்படும் மதிமுக தரப்பு நம்புகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+