திமுக-கம்யூனிஸ்ட்கள் தொகுதி பங்கீட்டில் இழுபறி
சென்னை:
மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் திமுக தலைவர் கருணாநிதி நடத்திய தொகுதி உடன்பாடுகுறித்த பேச்சுவார்த்தையில் எந்தவித முடிவும் எட்டப்படவில்லை. இதையடுத்து இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும்அவசர ஆலோசனை நடத்தின.
நாளை மறுதினம் திமுக மாநாடு தொடங்கவுள்ள நிலையில் (இந்த மாநாட்டில் தான் கூட்டணிக் கட்சிகள்போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை அறிவிக்கப்படவுள்ளது) தொகுதிப் பங்கீடு தொடர்பாக கருணாநிதி,கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் நேரடி ஆலோசனையைத் தொடங்கியுள்ளார். முதலில் மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் பேச்சு நடந்தது.இந்த ஆலோசனையின்போது 10 தொகுதிகள் தர வேண்டும் என்று கட்சியின் மாநிலச் செயலாளர் வரதராஜன்வற்புறுத்தினார். ஆனால் 8தான் தருவோம் என்று கருணாநிதி தெரிவித்துள்ளார். இதனால் இப்பேச்சுவார்த்தையில்உடன்பாடு ஏற்படவில்லை.
இதைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் தா.பாண்டியன், நல்லகண்ணு, பழனிச்சாமி எம்.எல்.ஏ.ஆகியோர் அடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் குழுவினர் நேற்று அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதியை சந்தித்துஆலோசனை நடத்தினர்.
மார்க்சிஸ்ட்டுகளைப் போலவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் 10 தொகுதிகளைக் கோரியது. ஆனால்இவர்களுக்கும் ஒற்றை இலக்கத் தொகுதிகளையே ஒதுக்க முடியும் என கருணாநிதி விளக்கினார்.
இதற்கு இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள் உடன்படவில்லை எனத் தெரிகிறது. இதனால் இந்தப்பேச்சுவார்த்தையிலும் முடிவு எட்டப்படவில்லை.
பேச்சுவார்த்தைக்குப் பின்னர் வெளியே வந்த தா.பாண்டியன் செய்தியாளர்களிடம் பேசுகையில், வந்தோம்,பேசினோம், தொடர்ந்து பேசுவோம் என்று பொத்தாம் பொதுவாக கூறி விட்டு சென்று விட்டார்.
தொடர்ந்து இரு கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடனும் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் எனத் தெரிகிறது.இன்று இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சித் தலைவர்களுடன் கருணாநிதி ஆலோசனை நடத்துகிறார்.
அதைத் தொடர்ந்து பெரிய கட்சிகளான மதிமுக, பாமக, காங்கிரஸ் ஆகியவற்றுடன் பேசவுள்ளார்.
முன்னதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் சந்தித்துப் பேசி, இருதரப்பும் சமமான இடங்களைக் கேட்பது, ஒருவர் கேட்கும் தொகுதியை இன்னொருவர் கேட்பதில்லை என்றுமுடிவெடுத்தனர். இதன் பின்னரே இரு தரப்பினரும் கருணாநிதியை சந்தித்தனர்.
ஆனால், திமுக கொடுக்கும் இடங்கள் குறைவாக இருப்பதாகக் கருதும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளின்தலைவர்களும் நேற்று இரவு அவசரமாக சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications