தமிழகத்தில் மே 8ம் தேதி வாக்குப் பதிவு: 11ல் தேர்தல் முடிவுகள்
டெல்லி:
தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபைத் தேர்தலுக்கான தேதிகளை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது. தமிழகத்தில் மே 8ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், புதுவை மற்றும் அஸ்ஸாம் மாநில சட்டசபைகளின் ஆயுட்காலம் மே மாதத்துடன் முடிவடைகிறது. இதையடுத்து இந்த மாநிலங்களுக்கு சட்டசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டியுள்ளது.தேர்தல் தேதி தொடர்பாக பல கட்ட ஆலோசனைகளை மேற்கொண்ட தேர்தல் ஆணையம் இன்று தேதிகளை அறிவித்தது. டெல்லியில் இன்று மாலை நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் பி.பி.டாண்டன் தேர்தல் தேதிகளை அறிவித்தார்.
அதன்படி தமிழகத்தில் மே 8ம் தேதி, திங்கள்கிழமை, ஒரே கட்டமாக 234 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது.
ஏப்ரல் 13: வேட்பு மனு தாக்கல் தொடங்கும்
ஏப்ரல் 20: மனு தாக்கலுக்கு கடைசி நாள் ஆகும்
ஏப்ரல் 21: மனுக்கள் பரிசீலனை செய்யப்படும்
ஏப்ரல் 24: மனுக்களை வாபஸ் பெற கடைசி நாளாகும்.
மே 8: வாக்குப் பதிவு
மே 11: வாக்கு எண்ணிக்கை நடக்கும். அன்று பகலிலேயே முடிவுகளும் வெளியாகிவிடும்.
பாண்டிச்சேரி:
புதுவையில் மே 3 மற்றும் 8 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறும்.
கேரளாவில் ஏப்ரல் 22, 29 மற்றும் மே 3 ஆகிய தேதிகளில் மூன்று கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறும்.
அஸ்ஸாமில் ஏப்ரல் 3 மற்றும் 10 ஆகிய தேதிகளில் இரு கட்டமாக தேர்தல் நடைபெறும்.
மேற்கு வங்கத்தில் 5 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.












Click it and Unblock the Notifications