மக்களவையில் தமிழக-கேரள எம்பிக்கள் மோதல்
டெல்லி:
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக மக்களவையில் தமிழக, கேரள எம்பிக்கள் இடையே கடும்வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் பெரும் கூச்சல் குழப்பம் நிலவியதால் அவை ஒத்தி வைக்கப்பட்டது.
மக்களவையில் இந்த விவகாரத்தை கேரள காங்கிரஸ் எம்பியான பிரான்சிஸ் ஜார்ஜ் கிளப்பினார். முல்லைப்பெரியாறு விவகாரத்தால் கேரளத்தின் இதயப் பகுதியில் பெரும் அபாயகரமான சூழல் உருவாகி வருகிறதுஎன்றார்.அவருக்கு ஆதரவாக மாத்ருபூமி பத்திரிக்கையின் உரிமையாளரும் மதசார்பற்ற ஜனதா தளத்தின் எம்பியுமானவீரேந்திர குமார், சிபிஎஎம்மின் கிருஷ்ணதாஸ், பி.சி. தாமஸ் ஆகிய எம்பிக்களும் பேசினர்.
ஜார்ஜ் தாமஸ் தமிழகத்தைக் குறைகூறிப் பேச ஆரம்பித்தவுடன், திமுக கூட்டணியைச் சேர்ந்த தமிழக எம்பிக்கள்எழுந்து கேரளத்துக்கு எதிராக கோஷமிட்டனர். மேலும் இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால் அதை இங்குவிவாதிக்கவே அனுமதிக்கக் கூடாது என்றனர்.
இதனால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. அப்போது பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரியரஞ்சன்தாஸ் முன்ஷி, மக்களின் பிரச்சனைகளை வைத்து அவை பிளவுபடக் கூடாது என்றார்.
ஆனாலும் தமிழக, கேரள எம்பிக்கள் தொடர்ந்து கூச்சலிட்டதால் அவை ஒத்தி வைக்கப்பட்டது.
ஆழ்ந்த அமைதியில் ஜெ - ஏன்?
இதற்கிடையே முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை கேரள காங்கிரஸ் அரசுமதித்து நடக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் எம்.கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தை உயர்த்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அணையின்முழுப் பராமரிப்பையும் தமிழக அரசிடம் ஒப்படைக்கவும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்தத் தீர்ப்புக்கு கேரள அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அணையின் உயரத்தை எக்காரணம் கொண்டும்உயர்த்த அனுமதிக்க மாட்டோம் என்று கேரள முதல்வர் உம்மன் சாண்டி பிடிவாதமாகக் கூறியுள்ளார்.
இந் நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் எம்.கிருஷ்ணசாமி, கேரள காங்கிரஸ் அரசின் போக்கைக்கண்டித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை கேரள அரசு மதிக்க வேண்டும். தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்யாமல், 136 அடிஉயரத்தை 142 அடி உயரமாக அதிகரிக்க ஒத்துழைக்க வேண்டும்.
தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்தால், தேவையில்லாமல் இரு மாநில நல்லுறவு பாதிக்கப்படும்.
இரு மாநிலங்களிலும் நட்புடன் பழகி வரும் இரு தரப்பு மக்களும், விவசாயிகளும் பாதிக்கப்படுவர் என்றுகூறியுள்ளார் அவர்.
முல்லைப் பெரியாறு அணை தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பைப் பாராட்டியோ, வரவேற்றோ இதுவரைமுதல்வர் ஜெயலலிதா எந்தவித அறிக்கையும் நேரடியாக விடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கேரளத்தில் நடக்கும் சட்டமன்றத் தேர்தலில் கருணாகரனின் கட்சியுடன் கூட்டணி அமைக்கவுள்ள நிலையில்முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தலையிட்டால் பிரச்சினை வரும் என யோசிக்கிறாரோ என்னவோ?
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications