சத்யபாமா பல்கலை. மாணவர்கள் பெரும் ரகளை
சென்னை:
எஸ்.ஆர்.எம். பொறியியல் கல்லூரியைத் தொடர்ந்து சத்யபாமா நிகர்நிலைப் பல்கலைக்கழக பொறியியல் மாணவர்களும் இன்று பெரும் ரகளையில் ஈடுபட்டு, கல்லூரிக்குள் பயங்கர வன்முறையில் இறங்கினர்.
பொறியியல் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் சமீபத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், அங்கீகாரம் பெற மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.இது பொறியியல் மாணவர்களிடையே பெரும் பீதியைக் கிளப்பியுள்ளது. சென்னை அருகே காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். நிகர்நிலைப் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட பொறியியல் கல்லூரி மாணவர்கள் இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டு, உரிய பதில் கிடைக்காததால் பெரும் ரகளையில் ஈடுபட்டனர்.
கல்லூரி வளாகத்தில் வன்முறையில் இறங்கிய அவர்கள் கம்ப்யூட்டர்கள் உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கினர். இதனால் ரூ. 3 கோடியளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக 9 மாணவர்கள் கைது செய்யப்பட்டு செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் சென்னை அருகே சோழிங்கநல்லூரில் உள்ள சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழக (முன்னாள் அதிமுக எம்.பி. ஜேப்பியாருக்கு சொந்தமானது) பொறியியல் கல்லூரி மாணவர்களும் இன்று ரகளையில் இறங்கினர்.
கல்லூரிக்குள் வன்முறையில் ஈடுபட்ட அவர்கள் கம்ப்யூட்டர்கள் உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கினர்.
லட்ச, லட்சமாக கொட்டிக் கொடுத்து படித்தும், தங்களது படிப்புகளுக்கு அங்கீகாரம் இல்லை என்றால் நாங்கள் எங்கே போவது, எங்களது எதிர்காலம் என்னவாகும் என்று மாணவர்கள் கோபத்துடன் கேட்டனர்.
கல்லூரி நிர்வாகம் தங்களது கேள்விகளுக்கு சரியாக பதில் தர மறுப்பதாகவும், தங்களது பத்தாவது மற்றும் பிளஸ்டூ சான்றிதழ்களை கிழித்துப் போட்டு விட்டு, என்ன செய்து விடுவீர்கள், பார்க்கலாம் என்று சவால் விட்டுப் பேசுவதாகவும் மாணவர்கள் குமுறியுள்ளனர்.
கல்லூரி விடுதியில் தங்கியிருந்த மாணவர்கள் அனைவரும் வெளியேறி விட்டனர். இன்று யாரும் வகுப்புகளுக்குச் செல்லவில்லை.
மாணவர்கள் போராட்டம் காரணமாக ஏராளமான போலீஸார் கல்லூரி வளாகத்திற்குள் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications