பிளஸ் டூ தேர்வு தொடங்கியது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகம் மற்றும் புதுவையில் இன்று பிளஸ் டூ தேர்வுகள் தொடங்கின. இன்று தமிழ் முதல் தாள் தேர்வு நடந்தது.
தமிழகம் முழுவதும் மொத்தம் 4,421 மேல் நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 5,27,105 மாணவ, மாணவியர் இந்தத் தேர்வை எழுதினர். மொத்தம் 1,570 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.தனித் தேர்வர்களாக 49,690 மாணவ, மாணவியரும் இன்று தேர்வு எழுதினர்.தேர்வையொட்டி ஏராளமான பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மாணவ, மாணவியர் பிட் அடித்தல், பார்த்து எழுதுதல் போன்ற குற்றங்களைச்செய்தால் நிரந்தரமாக பிளஸ் டூ தேர்வு எழுதத் தடை விதிக்கப்படுவர் எனஎச்சரிக்கப்பட்டுள்ளது.
புதிய பாடத் திட்டத்தின்படி நடக்கும் முதல் பொதுத் தேர்வு இது.
மார்ச் 16ம் தேதி முதல் ஏப்ரல் 15ம் தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணிநடைபெறும். அதன் பின்னர் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.












Click it and Unblock the Notifications