சிறுசேரி: அரசு மீது சிங்கப்பூர் நிறுவனம் வழக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சிறுசேரி நில ஒப்பந்தத்தை ரத்து செய்தது ஏன் என்பது குறித்து 2 வாரங்களுக்குள்விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்அனுப்பியுள்ளது.

டான்சி போல இன்னொரு விவகாரத்தில் வசமாக மாட்டியுள்ளது அதிமுக அரசு.

சென்னை அருகே சிறுசேரி சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் உள்ள 103 ஏக்கர்நிலத்தை சிங்கப்பூரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு தமிழக அரசு விற்றது.

இப் பகுதியில் ஒரு ஏக்கர் நிலத்தின் விலை ரூ. 2 கோடி. ஆனால், அதை ஏக்கருக்குவெறும் ரூ. 15 லட்சத்திற்கு அரசு விற்றது. அடிமாட்டு விலைக்கு விற்கப்பட்டதில்அரசுக்கு ரூ. 191 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டது.

ஆனால், இந்த நில பேரத்தில் ஆளும் தரப்புக்கு ரூ. 125 கோடியை சிங்கப்பூர்நிறுவனம் லஞ்சமாகக் கொடுத்ததாக கருணாநிதி குற்றம் சாட்டினார்.

(இதையடுத்து அந்த நில விற்பனையையே முதல்வர் ஜெயலலிதா திடீரென ரத்துசெய்தார். இதற்காக அமைச்சரவையைக் கூட்டி அவசர முடிவு எடுக்கப்பட்டது.ஆனால், வெளியில் சொல்லப்படவல்லை.)

இந் நிலையில் நில விற்பனையில் நடந்துள்ள ஊழல் குறித்து சிபிஐ விசாரணைக்குஉத்தரவிடக் கோரி திமுக பொருளாளர் ஆற்காடு வீராசாமி உயர்நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்தார்.

இந்த மனு 2 நாட்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தபோது சிறுசேரி நிலவிற்பனையை ரத்து செய்வதாக தமிழக அரசு தெரிவித்தது. (அதற்கு சில நாட்களுக்குமுன்பே அமைச்சரவையைக் கூட்டி இந்த முடிவு எடுக்கப்பட்டது)

இதைத் தொடர்ந்து திமுக தொடர்ந்த வழக்கு வாபஸ் பெறப்பட்டது.

இந் நிலையில் தமிழக அரசின் முடிவை எதிர்த்து சிங்கப்பூர் நிறுவனம் சென்னைஉயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

அதில், தமிழக அரசின் உத்தரவை தடை செய்யக் கோரப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா, இதுதொடர்பாக 2வாரங்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு கூறி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+