மதிமுகவுக்கு 40 தொகுதிகள் தர அதிமுக தயார்?
மதுரை:
மதிமுகவுக்கு திமுக 22 தொகுதிகள் தரத் தயாராக உள்ள நிலையில், அதிமுக 35 தொகுதிகள் வரைத் தயாராகஉள்ளது. ஆனால், அவர்களுடன் 45 தொகுதிகளை வைகோ கேட்டு வருவதாகத் தெரிகிறது.
40 தொகுதிகள் தரப்பட்டால் கூட வைகோ அதிமுகவுக்கு அணி மாறிவிடுவார் என்றே தெரிகிறது.திமுக கூட்டணியில் மதிமுக நீடிப்பது குறித்து எழுந்த சர்ச்சையை, திமுககூட்டணியில்தான் நீடிப்போம் என்ற அறிவிப்பை வெளியிட்டு முற்றுப்புள்ளிவைத்தார் வைகோ. ஆனால், இது முற்றுப் புள்ளி அல்ல, கமா தான் என்றாகிவிட்டது.
மறுபடியும் கூட்டணி சர்ச்சையில் மதிமுக சிக்கியுள்ளது. அதிமுக கூட்டணிக்குத் தாவத்தயாராகி விட்டதாகவும், 40 தொகுதிகள் தரப்பட்டால் உடனேயே திமுகவிடமிருந்துமதிமுக விலகும் என்றும் பேச்சு அடிபடுகின்றன.
இந் நிலையில் தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் நடந்த மதிமுக பிரமுகர் இல்லத்திருமண விழாவில் கலந்து கொண்ட வைகோ மதுரை விமான நிலையம் வந்தார். அங்கு தனதுகட்சியின் மதுரை மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் அரை மணி நேரம் வைகோ ஆலோசனைநடத்தினார்.
அப்போது நிர்வாகிகள் அவரிடம் கூட்டணி குறித்துக் கேட்க, 2 நாட்களில் நல்ல முடிவை அறிவிப்பதாகக்கூறியிருக்கிறார். இதனால் திமுக கூட்டணியில் தொடரும் முடிவை வைகோ மறுபரிசீலனை செய்து வருவதுஉறுதியாகியுள்ளது.
முருகனும், சூரபத்மனும்:
முன்னதாக போடிநாயக்கனூரில் நடந்த திருமண விழாவில் வைகோ பேசுகையில்,
நாம், நமது கருத்துக்களை சொல்ல வேண்டுமே தவிர அதைத் திணிக்கக் கூடாது. இதனால் தான் இந்தத் திருமணம் புரோகிதரைக் கொண்டு நடக்கும் என்று சொன்னபோது அதை நான் தடுக்கவில்லை.
தமிழ் வழித் திருமணம் என்பது நமது விருப்பம், கருத்து. ஆனால், அதைத் திணிக்க முடியாது.
பஞ்சாயத்துத் தலைவர் தேர்தலில் நான் எனது ஊரில் போட்டியிட்டபோது அனைத்து சமூக மக்களும் எனக்கு ஆதரவு கொடுத்தனர்.
பிள்ளையார்குளம் வீர காளியம்மன் கோவில் கிடா வெட்டு விழாவுக்கு என்னை அப் பகுதியினர் அழைப்பது வழக்கம். என்னை மதித்து அழைக்கும் அவர்களது கோரிக்கையை ஏற்று, தட்டாமல் நானும் கோவிலுக்குச் செல்வதுண்டு.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்குச் சென்றபோது எனது தோளில் கிடக்கும் கருப்புத் துண்டை எடுத்து விட்டேன். அந்தக் கால மன்னர்களே தங்களது பட்டு பீதாம்பரங்களை எடுத்து இடுபில் கட்டிக் கொண்டுதான் ஆண்டவனை வணங்கச் செல்வது வழக்கம்.
முன்னாள் முதல்வர் ஜோதிபாசு கூட கொல்கத்தாவில் உள்ள துர்க்கையம்மன் கோவிலுக்கு சென்று வணங்கி குங்குமம் வைத்துக் கொள்வார். நம்மை மதிப்பவர்களுக்காக நாம் இதை தவிர்க்காமல் இருக்கலாம் என்பதைச் சொல்லவே இதைத் தெரிவித்தேன்.
தமிழ் மக்கள் வீரத்தை வழிபடுபவர்கள். வீரத்தின் சின்னம் முருகன். தமிழர்களின் கடவுளும் முருகன்தான்.
பகுத்தறிவு இயக்கத்தைச் சேர்ந்தவன் தான் நான். இருந்தாலும் தமிழ்க் கடவுளான பழனிவேல் என்றாலும் ஆதிவேல் என்றாலும் முருகன் தான்.
முருகன் அன்பே உருவானவர், யாரையும் அரவணைத்துக் கொள்பவர். பகைவருக்கும் அருள் பாலிப்பவர் முருகன்.
சூரபத்மனை வதம் செய்தபோது கூட அவனை முற்றிலும் அழித்து விடாமல், சேவலாகவும், மயிலாகவும் மாற்றி தன்னுடனேயே வைத்துக் கொண்டார்.
முருகன் செல்வதற்கு சூரபத்மன் தேவை என்ற நிலையும் உருவாகி விட்டது.
பகைவருக்கும் அருளும் முருகப் பெருமானை நாம் தமிழ்க் கடவுளாக வணங்குகிறேம். அனைவரையும் அரவணைத்துச் செல்லும் வாழ்வைத் தான் நாமும் பின்பற்ற வேண்டும் என்றார் வைகோ.
அனைவரையும் அரவணைத்துச் செல்ல வேண்டும் என்ற யோசனையை அவர் மணமக்களுக்குச் சொன்னாரோ இல்லையோ, திமுக தலைவர் கருணாநிதிக்கு இதில் மெசேஜ் இருப்பது மட்டும் உறுதியாகத் தெரிந்தது.












Click it and Unblock the Notifications