விஜய்காந்துக்கும் அதிமுக கூட்டணிக்கு ரெடி?
சென்னை:
மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியோடு விஜய்காந்தையும் தன் பக்கமாக இழுக்க அதிமுக மிகத் தீவிரமாகமுயன்று வருகிறது.
இதற்காக ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஒரு பக்கம் முயற்சி செய்ய, இன்னொரு பக்கம்தமிழகத்தின் முன்னணி நாளிதழ் ஒன்றின் அதிபர் மூலமாக விஜய்காந்தை அதிமுக அப்ரோச் செய்துள்ளது.ஆனால், விஜய்காந்த் தடாலடியாக 70 தொகுதிகள் வரை கேட்டதால் அந்த நாளிதழ் அதிபர் திரும்பிவந்துவிட்டதாகத் தெரிகிறது. இந் நிலையில் போயஸ் தோட்டமே நேரடியாக டீலிங்கில் இறங்கி விஜய்காந்துடன்பேசியுள்ளது.
இதைத் தொடர்ந்து தனது கட்சியின் நிர்வாகிகளுடன் விஜய்காந்த் தீவிர ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளார்.அதில் பலரும் அதிமுக கூட்டணிக்கு ஓ.கே. சொல்லிவிடலாம் என்று கூறுவதாகத் தெரிகிறது.
தனித்து நின்று ஓட்டைப் பிரித்து திமுக அல்லது அதிமுகவின் வெற்றிக்கு உதவுவதை விட அதிமுகவுடன்கூட்டணி சேர்ந்து சட்டசபைக்கு நாம் செல்வதே சரியாக இருக்கும் என நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.இதையடுத்து ஓரிரு நாட்களில் விஜய்காந்தும் நல்ல முடிவை எடுக்கவுள்ளார்.
கடந்த 2 மாதமாக தமிழகம் பூராவும் போய் பேசிய விஜய்காந்த், என்னை மாதிரி தனித்துப் போட்டியிட திமுக,அதிமுக தயாரா என்று ஓட்டை ரெக்கார்ட் மாதிரி திரும்பத் திரும்ப கேட்டது நினைவுகூறத்தக்கது.
கார்த்திக் ஏற்கனவே அதிமுகவுக்கு தலையாட்டிவிட்ட நிலையில் விஜய்காந்தையும் பிடித்துப் போட அதிமுகமிகத் தீவிரமாக உள்ளது.












Click it and Unblock the Notifications