அதிமுக கூட்டணியில் கார்த்திக்குக்கு இடமில்லை?
மதுரை:
பார்வர்ட் பிளாக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் சந்தானம் நீக்கப்பட்டதற்கு மதுரை நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
மதுரையில் பார்வர்ட் பிளாக் கட்சியின் மாநிலக் குழுக் கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட சந்தானம் எம்.எல்.ஏ. பேசுகையில்,கட்சியின் அடிப்படை உறுப்பினர் மற்றும் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து என்னை நீக்கி கட்சி மேலிடம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து மதுரை நீதிமன்றத்தில் உத்தரவு வாங்கியுள்ளேன்.
எனவே நான்தான் தற்போது தமிழக பார்வர்ட் பிளாக் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கிறேன். நான்தான் கட்சியின் முடிவுகளைத் தீர்மானிக்க முடியும்.
எனது தலைமையில் நடந்த மாநிலக் குழுக் கூட்டத்தில் தேர்தல் கூட்டணி தொடர்பாக முடிவெடுக்க எனக்கே அதிகாரம் கொடுத்து முடிவெடுக்கப்பட்டுள்ளது.
கூட்டணி குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என்றார் சந்தானம்.
(முடிவா.. அதான் அதிமுக கூட்டணி என்பது நீங்கள் எப்பவோ எடுத்த முடிவாச்சே).
கார்த்திக்கும் அதிமுக கூட்டணியையே எதிர்பார்க்கிறார். அவர்களது கட்சியின் தலைவர் பிஸ்வாஸோ திமுக கூட்டணி என்கிறார்.
வைகோ, திருமா வந்துவிட்டதால் கார்த்திக்கை அப்படியே கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவோமா என்ற யோசனைக்கு அதிமுக வந்துவிட்டது.
ஆனால், எப்போதும் தங்களுடன் இருந்த சந்தானத்துக்கு ஒரு சீட் கட்டாயம் உண்டு என்று உறுதிமொழி தரப்பட்டுள்ளது.
சந்தானத்தக்கு அதிமுகவின் முழு ஆதரவும் கிடைத்துள்ளதால், இதுவரை கார்த்திக் தரப்புக்குப் போன பார்வர்ட் பிளாக் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர்களில் பலரும் சந்தானத்திற்கு ஆதரவாக திரும்பி வருகின்றனர்.
கார்த்திக்கோ போயஸ் கார்டன் கதவுகளை நோக்கி தவமிருந்து வருகிறார். அவருக்கு அழைப்பு வருவது சந்தேகமே என்கிறார்கள்.
சந்தானத்தையும் கார்த்திக்கையும் சாமாதானப்படுத்த நடராஜன் தலைமையில் நடக்க இருந்த மீட்டும் கூட கடைசி நேரத்தில் கேன்சலாகிவிட்டதாம்.
பிஸ்வாசின் யோசனைப்படி கார்த்திக் ஆரம்பத்தில் திமுக கூட்டணிக்கு தயாரானார். ஆனால் கட்சியின் பெரும்பாலானவர்கள் அதிமுகவுக்கே ஆதரவு தெரிவித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications