ஜெ. தமிழர்களுக்கு எதிரானவர் அல்ல: திருமா
கடலூர்:
அரசியல் நடத்துவதில் தான் கெட்டிக்காரர் என்பதை முதல்வர் ஜெயலலிதா ஆணித்தரமாக நிரூபித்துள்ளார் என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நானும், வைகோவும் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளதன் மூலம் இக்கூட்டணி வலுவடைந்துள்ளது. புதுவையிலும் நாங்கள் அதிமுக கூட்டணியில் இடம் பெற்று, 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது மன நிறைவைத் தருகிறது.
வைகோவை கூட்டணியில் சேர்த்ததன் மூலம், அரசியல் நடத்துவதில் தான் கெட்டிக்காரர் என்பதை ஜெயலலிதா மீண்டும் நிரூபித்து விட்டார். அவரது அரசியல் சாதுரியம் இதன் மூலம் வெளிப்பட்டுள்ளது. கூட்டணி அமைப்பதில் அவர் செய்துள்ளது மிகப் பெரிய சாதனை.
தமிழர் நலனுக்கு விரோதமானவர் என்ற எண்ணத்தையும் ஜெயலலிதா துடைத்து எறிந்துள்ளார். விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக போன்ற தமிழர் நலன், உரிமைக்காக குரல் கொடுக்கும் கட்சிகளை அதிமுகவுடன் கூட்டணி சேர்த்துள்ளதன் மூலம், தான் தமிழர்களுக்கு எதிரானவர் அல்ல என்பதை நிரூபித்துள்ளார் என்றார் திருமாவளவன்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications