தனசேகரன் ஜாமீன் நிபந்தனை தளர்வு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை எம்.ஜி.ஆர் நகர் வெள்ள நிவாரணப் பலிகள் வழக்கில் போலீசாரால் பொய்வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலையாகியுள்ள திமுக கவுன்சிலர்தனசேகரனுக்கு சென்னை நீதிமன்றம் ஜாமீன் நிபந்தனையை தளர்த்திஉத்தரவிட்டுள்ளது.

எம்.ஜி.ஆர் நகரில் வெள்ள நிவாரணம் பெறக் காத்திருந்தவர்களிடையே ஏற்பட்டநெரிசலில் சிக்கி 42 பேர் இறந்தனர்.

இதற்கு திமுகவினர் பரப்பிய வதந்தியே இதற்குக் காரணம் என்று போயஸ் கார்டன்கண்டுபிடித்து அப்பகுதி திமுக கவுன்சிலர் தனசேகரனை கைது செய்தது. (இதற்குபோலீசாரின் அலட்சியமும் அரசின் அலட்சியமுமே காரணம் என உச்ச நீதிமன்றம்கடும் கண்டனம் தெரிவித்தது தனிக் கதை)

இந்த வழக்கில் தனசேகரனுக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நிபந்தனைஜாமீன் வழங்கியது. அதன்படி, நாகர்கோவிலில் தங்கியிருந்து தினசரி அங்கு காவல்நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.

இந்த நிபந்தனையின்படி தற்போது தனசேகரன் நாகர்கோவிலில் தங்கியுள்ளார்.

ஆலந்தூர் தொகுதியில் திமுக சார்பில் வரும் தேர்தலில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளதனசேகரன், தனது ஜாமீன் நிபந்தனையை தளர்த்தக் கோரி சென்னை முதன்மைஅமர்வு நீதிமன்றத்தில் மனு செய்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி பெரிய கருப்பையா, நாகர்கோவிலுக்குப் பதில்சென்னையில் தனசேகரன் தங்கியிருக்கலாம். தினமும் டிஜிபி அலுவலகத்தில் ஆஜராகிகையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனையை தளர்த்தி உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+