பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது
சென்னை:
கூட்டணி தொடர்பாக அதிமுகவுடன் பேச்சு நடத்தலாம், வாருங்கள் என்று பார்வர்ட்பிளாக் கட்சித் தலைவர் கார்த்திக்குக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் சந்தானம்அழைப்பு விடுத்துள்ளார்.
2 நாட்களுக்குள் தனது முடிவை அவர் அறிவிக்க வேண்டும் என்றும் சந்தானம் கெடுவிதித்துள்ளார்.பார்வர்ட் பிளாக் கட்சியின் தமிழக பொதுச் செயலாளராக இருந்தவர் சந்தானம்.அதிமுக ஆதரவு எம்.எல்.ஏவான இவரைத் தூக்கிவிட்டு நடிகர் கார்த்திக்கை திடீரெனபார்வர்ட் பிளாக் கட்சித் தலைவராக்கினார் அதன் தேசியத் தலைவரான பிஸ்வாஸ்.
சந்தானத்தைக் கண்டு கொள்ளாத கார்த்திக், அவரை பொதுச் செயலாளர்பதவியிலிருந்து நீக்கினார். இதை எதிர்த்து மதுரை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்சந்தானம். அதில் அவருக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது.
இதைத் தொடர்ந்து கட்சியின் மாநிலக் குழுவைக் கூட்டினார் சந்தானம். யாரும்எதிர்பாராத வகையில், இக்கூட்டத்திற்கு பெரும்பாலான உறுப்பினர்கள் வந்தனர்.அதில், கூட்டணி தொடர்பாக இறுதி முடிவெடுக்க சந்தானத்திற்கு அதிகாரம்வழங்கப்பட்டது.
மதுரை நீதிமன்ற உத்தரவுப்படி இப்போது சந்தானம்தான் கட்சியின் தலைமைப்பொறுப்பில் இருப்பவர். அவரை மீறி கார்த்திக்கால் எதுவும் செய்ய முடியாத நிலைஏற்பட்டுள்ளது.
கார்த்திக்கும் தனது கட்சியின் தொண்டர்களில் பெரும்பாலானவர்கள் அதிமுகஆதரவாளர்களாக இருப்பதால் அந்தக் கட்சியுடன் கூட்டணி வைக்க முன்வந்துவிட்டார்.
ஆனால், சந்தானத்துடன் சமரசமாகப் போனால் தான் கூட்டணி என்று அதிமுககூறிவிட்டது. தேவைப்பட்டால் கார்த்திக் இல்லாத சந்தானம் தலைமையிலானபார்வர்ட் பிளாக்குடன் கூட்டணிக்கும் அதிமுக தயாராக உள்ளது.
இதையடுத்து சந்தானத்துடன் சமாதானமாகப் போகவும் கார்த்திக் தயாரானார்.இருவரையும் சந்திக்க வைத்து சமரசம் ஏற்படுத்த சசிகலாவின் கணவர் நடராஜன்முயற்சித்து வந்தார்.
ஆனால் மதிமுக திடீரென அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால், கார்த்திக்கெல்லாம்தேவையா என்று முதல்வர் ஜெயலலிதா யோசிக்க ஆரம்பித்துவிட்டார்.
சந்தானத்துக்கு மட்டும் ஒரு சீட்டைத் தந்துவிட்டு, கார்த்திக்கை நட்டாற்றில் விடத்திட்டமிட்டுள்ளார். இதனால் நடராஜனும் மெல்ல கார்த்திக்கிடம் இருந்துவிலகிவிட்டார்.
இதனால் கார்த்திக் நடுரோட்டில் நிற்கிறார். அவருக்கு ஆதரவாக இருந்தவர்கள் கூடஅதிமுக உத்தரவுப்படி படிப்படியாக சந்தானத்திற்கு ஆதரவாகத் திரும்பிவருகின்றனர்.
ஜெயலலிதாவை சந்திக்க நேரம் கேட்டு கார்த்திக் வாரக் கணக்கில் காத்திருக்கும்நிலையில் அவரை மேலும் குழப்பும் வகையில் சந்தானம் இன்று பேட்டியளித்தார்.
சந்தானம் கூறுகையில், கார்த்திக் தலைமைப் பொறுப்புக்கு வந்தவுடன் என்னையும்,எனது ஆதரவாளர்களையும், மூத்த நிர்வாகிகளையும் ஓரம் கட்டினர். ஆனால் மதுரைநீதிமன்றம் எனக்கு ஆதரவாக தீர்ப்பளித்துள்ளது.
கட்சி நலன் இப்போது மிகவும் முக்கியம். அதிமுகவுடன்தான் கூட்டணி அமைக்கவேண்டும் என பார்வர்ட் பிளாக் கட்சியினர் கருதுகின்றனர். எனவே கூட்டணிதொடர்பாக அதிமுகவுடன் பேச கார்த்திக்கை நான் அழைக்கிறேன்.
வாருங்கள், இருவரும் சேர்ந்து அதிமுகவுடன் பேசுவோம்.
கூட்டணி விஷயத்தில் மெளனம் காப்பது சரியாக இருக்காது. (அவர் எங்கேமெளனமா இருந்தார். அதிமுக கூட்டணிக்குத் தயார் என்று பலமுறை பேட்டிதந்துவிட்டாரே) மேலும் காலம் தாழ்த்தக் கூடாது (யாரு.. கார்த்திக்கா?),
2 நாட்கள் அவகாசம் தருகிறேன்,அதற்குள் வந்தால் பேசலாம். இல்லாவிட்டால்நாங்களே கூட்டணி தொடர்பாக அதிமுகவுடன் பேசிக் கொள்வோம் என்றார்சந்தானம்.
சந்தானத்தின் ராவடியைப் பார்க்கும்போது கண்ணதாசனின் பாட்டு தான் நினைவுக்கு வருகிறது.
பரமசிவன் (ஜெயலலிதா) கழுத்திலிருந்து பாம்பு (சந்தானம்) கேட்டது.. கருடா(கார்த்திக்) செளக்கியமா?
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் செளக்கியமே....
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications