ரயிலில் மகனின் பிணத்தோடு வந்த தந்தை !!
சென்னை:
கிட்னி பாதிக்கப்பட்ட மகனுக்கு சிகிச்சை அளிக்க கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு ரயிலில் பயணம்செய்தார் தந்தை. ஆனால், மகன் வழியில் ரயிலிலேயே மரணடைந்தார்.
கொல்கத்தாவைச் சேர்ந்தவர் துர்காசங்கர் மிஸ்ரா. இவரது மகன் சந்தீப் குமார் (17) இரு கிட்னிகளும்பாதிக்கப்பட்டு சிரமப்பட்டார். அவருக்கு வேலூர் சி.எம்.சி. மருத்துவனைையில் சிகிச்சை அளிக்ககொல்கத்தாவில் இருந்து அழைத்து வந்தார் மிஸ்ரா.கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் அவர்கள் வந்தனர். நேற்றிரவு அந்த ரயில் சென்னையை நெருங்கிக்கொண்டிருந்தபோது சந்தீப் மயக்கமடைந்தார். பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையம் அருகே வந்தபோது சந்தீப்இறந்துவிட்டார்.
என்ன செய்வது என்று தெரியாமல் விழித்த தந்தை மகனின் பிணத்துடன் சென்ட்ரல் ரயில் நிலையம் வரைபயணம் செய்தார். மகனின் உடலை ரயிலிலேயே விட்டுவிட்டு, உதவிக்கு யாரையாவது அழைக்கவும், அடுத்துஎன்ன செய்வது என்ற தவிப்பிலும் ரயிலை விட்டு கீழே இறங்கி கண்ணீருடன் அலைந்துள்ளார் மிஸ்ரா.
முதலில் ஒரு சக்கர நாற்காலியைக் கொண்டு வந்து மகனின் உடலை கீழே இறக்கலாம் என்று ரயில் நிலையத்தில்அலைந்தார் மிஸ்ரா. ஆனால், நம் ஊர் ரயில் நிலையத்தில் அதெல்லாம் இருக்குமா?. சக்கர நாற்காலிக்காகஅலைந்துவிட்டு வெறும் கையுடன் திரும்பி ரயில் நின்றிருந்த இடத்துக்கு வந்தவருக்கு அதிர்ச்சி.
ரயில் அங்கு இல்லை. ரயிலில் இருந்து எல்லோரும் இறங்கிவிட்டார்களா, சரக்குகள் இறக்கப்பட்டுவிட்டனவாஎன்று கூட சரி பார்க்காமல் ரயிலை யார்டுக்குக் கொண்டு போய்விட்டனர் ஊழியர்கள். சந்தீப்பின் உடலும்ரயிலில் போய்விட்டது.
அதிர்ந்து போன மிஸ்ரா ரயில்வே போலீசாரிடம் போய் அழுதுள்ளார். இதையடுத்து போலீசார் விரைந்து சென்றுரயிலில் இருந்த உடலை மீட்டனர். சந்தீபின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்குக்கொண்டு செல்லப்பட்டது.
மகனை பிழைக்க வைப்பதற்காக தமிழகம் அழைத்து வந்த தந்தை, அவரை ரயிலிலேயே பறி கொடுத்துவிட்டுக்கதறியது மனதைப் பிசைந்தெடுத்துவிட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications