நாமம் குறித்து நக்கல்: துரைமுருகன்மீது வழக்கு
சென்னை:
தேர்தல் ஆணையர் கோபால்சாமி நெற்றியில் இருந்த நாமம் இடுவது குறித்துநக்கலாகவும், இழிவாகவும் பேசியதாகக் கூறி திமுக முன்னணித் தலைவர்துரைமுருகன் மீது சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த அகில பாரத கிருஷ்ண சேவா என்ற சங்கத்தின் தலைவர்கோவிந்த ராமானுஜர் தாசர் என்பவர் இதுதொடர்பாக ஜார்ஜ்டவுன் 7வது பெருநகரநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.தனது மனுவில், மத்திய தேர்தல் ஆணையர் கோபால்சாமி சென்னைக்கு வந்திருந்தார்.அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
அப்போது அவரது நெற்றியில் போடப்பட்டிருந்த நாமம் குறித்து துரைருகன் கேலிசெய்துள்ளார். தேர்தல் கமிஷனர் அவரது நெற்றியில் நாமம் போட்டுள்ளார். நமக்கும்நாமம் போடப் போகிறார் என்று துரைமுருகன் கேலி செய்துள்ளார்.
இது அந்த அதிகாரியை மட்டும் கேலி செய்வதாக அமையவில்லை, மாறாகஒட்டுமொத்தமாக நாமம் அணியும் லட்சோப லட்சம் மக்களை அவமதித்துள்ளார்துரைமுருகன்.
மத உணர்வைப் புண்படுத்தும் வகையில் கருத்துத் தெரிவித்த துரைமுருகன் மீது கடும்நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி திருமகள், 23ம் தேதி விசாரணை நடைபெறும்என உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications