சென்னை ஐஐடி-ஆஸ்திரேலியா கூட்டு ஆராய்ச்சி
சென்னை:
சென்னை ஐஐடிக்கும் ஆஸ்திரேலியாவின் குயீன்ஸ்லாந்து பல்கலைக்கழகத்துக்கும் இடையே ஆராய்ச்சி,ஆசிரியர், மாணவர் பரிமாற்றம் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
சென்னை வந்துள்ள ஆஸ்திரேலியப் பிரதமர் ஜான் ஹாவர்ட் முன்னிலையில் இன்று இந்த ஒப்பந்தம்கையெழுத்தானது.இதன்படி இரு கல்வி நிலையங்களுக்கும் இடையே ஆசிரியர்கள், மாணவர்கள் பரிமாற்றம் செய்துகொள்ளப்படுவது. இரு கல்வி நிலையங்களும் கூட்டாக இன்பர்மேசன் செக்யூரிட்டி, கிரிப்டாலஜி போன்றதுறைகளில் ஆராய்ச்சிகளில் ஈடுபடும்.
அப்போது பேசிய ஹாவர்ட், ஆஸ்திரேலியாவில் கல்வி கற்க வரும் இந்திய மாணவர்களுக்கு உதவித் தொகைவங்க 25 மில்லியன் டாலரில் ஒரு ஸ்காலர்ஷிப் நிதி உருவாக்கப்படும்.
இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியா வரும் மாணவர்களின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்து வருகிறது.உயர் கல்வி கற்க வெளிநாடு செல்லும் இந்திய மாணவர்களில் பெரும்பாலானவர்கள் ஆஸ்திரேலியாவையேதேர்வு செய்கின்றனர்.
ஆஸ்திரேலியாவில் செயற்கைக் கோள், மருந்து தயாரிப்பு, இன்ஸ்ரூமெண்டேசன் ஆகிய துறைகளில் இந்தியர்கள்அதிக அளவில் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ளனர் என்றார்.
சென்னையில் தூதரகம்:
மேலும் தென் இந்தியாவுக்கான ஆஸ்திரேலியத் தூதரகம் சென்னையில் துவங்கப்படும். இந்தத் தூதரகம் விசா வழங்கும் இடமாகமட்டுமல்லாமல், வெளிநாடுகளில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு சேவை மையமாகவும் செயல்படும் என்றார்.
ஜெ. சந்திப்பு:
முன்னதாக ஜான் ஹாவர்ட்டை முதல்வர் ஜெயலலிதா ஆளுனர் மாளிகையில்சந்தித்துப் பேசினார்.
நேற்று இரவு சென்னை வந்த ஹாவர்ட்டை இன்று காலை ஜெயலலிதா சந்தித்துப்பேசினார்.
இச் சந்திப்பின்போது தமிழக அரசின் சார்பில் தலைமைச் செயலாளர் நாராயணன்உள்ளிட்டஅதிகாரிகளும், ஆஸ்திரேலியத் தரப்பில் இந்தியாவுக்கான ஆஸ்திரேலியதூதர் ஜான் மெக்கார்த்தி உள்ளிட்டோரும் இருந்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications