30 சீட்: திமுக-பாமக இன்று தொகுதி உடன்பாடு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

திமுக தலைவர் கருணாநிதியுடன் பாமக நிறுவனர் ராமதாஸ் சுமார் 2 மணி நேரம்தொகுதிப் பங்கீடு தொடர்பாக தீவிர ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்துஇன்று மாலை தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தில் இரு கட்சித் தலைவர்களும்கையெழுத்திடவுள்ளனர்.

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 10 தொகுதிகள்ஒதுக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பான ஒப்பந்தம் அக்கட்சிக்கும், திமுகவுக்கும்இடையே ஏற்பட்டது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் வந்துசென்ற பின்னர் பாமக நிறுவனர் ராமதாஸ்,தலைவர் ஜி.கே.மணி, எம்.எல்.ஏ. காடுவெட்டி குரு ஆகியோர் அறிவாலயம்வந்தனர்.

கருணாநிதியுடன் பாமக குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் தொகுதிகள்குறித்து உடன்பாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த தேர்தலில் அதிமுகவுடன்கூட்டணி வைத்திருந்த பாமக 27 தொகுதிகளில் போட்டியிட்டது.

இந்தத் தேர்தலில் திமகவுடன் இணைந்துள்ள அக்கட்சிக்கு 30 தொகுதிகள் தருவதாகதிமுக கூறியுள்ளது. ஆனால் அதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 35 தொகுதிகள்தரப்பட்டுள்ளன. எனவே எங்களுக்கும் 35 தொகுதிகள் தேவை என்று பாமக கூறியது.இதனால் இழுபறி நிலவியது.

இறுதியில் 30 தொகுதிகளுக்கு பாமக இறங்கி வந்துள்ளதாகத் தெரிகிறது. இந்தப்பின்னணியில், ராமதாஸும், கருணாநிதியும் நேற்று சந்தித்துப் பேசினர். சுமார் 2 மணிநேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நீடித்தது.

பேச்சுவார்த்தைக்குப் பின்னர் வெளியே வந்த ராமதாஸ் செய்தியாளர்களிடம்பேசுகையில், ஓரளவு பேசி முடித்து விட்டோம். நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.நாளை (இன்று) கையெழுத்துப் போடுவோம்.

பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்ததா என்பது குறித்த கேள்விக்கெல்லாம்உங்களை நாளை மாலை சந்திக்கும்போது விரிவாகத் தெரிவிக்கிறேன் என்றார்.

பின்னர் நிருபர்களிடம் கருணாநிதி பேசுகையில், பாமகவுடன் பேச்சுவார்த்தை மனநிறைவுடன் சென்று கொண்டுள்ளது. அனேகமாக புதன்கிழமை மாலை ஒப்பந்தம்கையெழுத்தாகி விடும்.

காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுடனும் புதன் மற்றும்வியாழக்கிழமைக்குள் ஒப்பந்தமாகி விடும். மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தலைவர்களும் வந்து பேசியுள்ளார்கள். மீண்டும் பேசுவார்கள்.

அனைவருடனும் இந்த வார இறுதிக்குள் உடன்பாடு ஏற்பட்டு விடும் என்றார்கருணாநிதி.

எம்.ஜி.ஆர் நகர் தனசேகரன் ஆசி:

முன்னதாக எம்.ஜி.ஆர். நகர் கூட்ட நெரிசலில் சிக்கி 42 பேர் பலியான சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்ட பின்னர் முதல்முறையாக சென்னைக்கு வந்துள்ள திமுக கவுன்சிலர் தனசேகரன், கருணாநிதியை சந்தித்து ஆசி பெற்றார்.

நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்ட தனசேகரன் நாகர்கோவிலில் தங்கியிருந்து தினமும் காவல் நிலையத்தில் கையெழுத்துப் போட்டு வந்தார். தற்போதுஅந்த நிபந்தனையை மாற்றி, சென்னையில் தங்கியிருந்து தினமும் டிஜிபி அலுவலகத்தில் கையெழுத்துப் போடலாம் என தனசேகரனுக்கு சென்னை நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து சென்னை வந்த தனசேகரன் நேராக அண்ணா அறிவாலயம் சென்ற அவர் கருணாநிதியை சந்தித்து அவருக்கு சால்வை அணிவித்து ஆசிபெற்றார்.

வரும் சட்டசபைத் தேர்தலில் ஆலந்தூர் தொகுதியில் தனசேகரன் போட்டியிடுவார் என திமுகவினர் கூறுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+