மாப்ள வைகோ, மாப்ள திருமா: எஸ்எஸ்சந்திரன்
பாண்டிச்சேரி:
விபத்துல யாராவது செத்தா அம்மா (ஜெயலலிதா) ரூ. 50 ஆயிரம் ரூபாய அவுங்க குடும்பத்துக்கு தர்றாங்க.அதனால யாரப் பார்த்தாலும் இப்போ நடு ரோட்டுல தான் நடக்குறாங்க என நடிகரும் எம்பியுமான எஸ்எஸ்சந்திரன் பேசினார்.
பாண்டிச்சேரியில் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:கூட்டத்துக்கு வந்திருக்கும் நீங்கள் எல்லாம் எனக்கு மாப்பிள்ளைகள். அப்ப நான் உங்களுக்கு என்ன? மாமாதானே?. உடனே ஏற்பாடு செஞ்சு தாங்கன்னு ஏம் பின்னாடி வந்துறாதீங்க.
கூட்டத்துக்கு வந்திருக்கும் சின்ன வயசு பொண்ணுகள் எல்லாம் என் மருமகள்கள். பெரியவங்க எல்லாம் என்அத்தைமார்கள். என் பழைய பங்காளி, இன்றைய மாப்பிள்ளை வைகோ, மாப்பிள்ளை திருமாவளவன்ஆகியோர் அம்மாவுடன் கூட்டணி சேர்ந்துட்டாங்க.
கருணாநிதிய திட்ற வேலையை இனிமேல் வைகோவும் திருமாவளவனும் பார்த்துக்குவாங்க. தமிழ்நாட்லயும்பாண்டிச்சேரிலயும் மறுபடியும் அம்மா தான் ஆட்சியமைக்கப் போறாங்க.
விபத்துல யாராவது செத்தா அம்மா ரூ. 50 ஆயிரம் ரூபாய அவுங்க குடும்பத்துக்கு தர்றாங்க. அதனால யாரப்பார்த்தாலும் இப்போ நடு ரோட்டுல தான் நடக்குறாங்க.
இவ்வாறு எஸ்எஸ் பேசிக் கொண்டே போக மணி 10க்கு மேல் ஆகிவிட்டதால் அங்கு வந்த போலீசார் பவர்கனெக்ஷனை கட் செய்துவிட்டு மைக்கை தூக்கிச் சென்றனர்.
இதுவே தமிழ்நாடா இருந்தா நம்ம கூட்டத்துல போலீஸ் இப்படி நடந்துக்குமா என்றபடியே கீழே இறங்கிப்போனார் மாமா.. ஸாரி எஸ்எஸ் சந்திரன்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications