திமுகவில் மார்க்சிஸ்ட்-13, இயூ.முஸ்லீம் லீக்-3

Subscribe to Oneindia Tamil

சென்னை:

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 13தொகுதிகளும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள்ஒதுக்கப்பட்டுள்ளன.

மார்க்சிஸ்ட் கட்சிக்கான உடன்பாட்டில் அதன் மாநிலச் செயலாளர் வரதராஜனும் திமுகதலைவர் கருணாநிதியும் கையெழுத்திட்டனர்.

அதே போல இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் பேராசிரியர் காதர்மொஹைதீனும் கருணாநிதியும் கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

நேற்றிரவு தனது கட்சியின் பொதுச் செயலாளர் சையச் சத்தாருடன் கருணாநிதியைசந்தித்தார் மொஹைதீன்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், 5 தொகுதிகள்ஒதுக்கும்படி கோரியுள்ளோம். கனிவுடன் பரிசீலிப்பதாக கலைஞர் தெரிவித்துள்ளார்.பேச்சுவார்த்தை மகிழ்ச்சியாக நடந்தது என்றார்.

இந் நிலையில் அக் கட்சிக்கு 3 தொகுதிகளை திமுக ஒதுக்கியுள்ளது. இந்த மூன்றுதொகுதிகளிலும் உதய சூரியன் சின்னத்திலேயே இக் கட்சி போட்டியிடும்.

அதிமுக கூட்டணியில் இரு இஸ்லாமிய கட்சிகளுக்கு மொத்தம் 3 இடங்கள்ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 10 தொகுதிகளை மட்டுமேஒதுக்கிய கருணாநிதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கு 13 தொகுதிகளை ஒதுக்கியுள்ளார்.

திமுக கூட்டணியில் முதலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு தொகுதிப் பங்கீடுமுடிந்தது. இதைத் தொடர்ந்து இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன்முஸ்லீம் லீக் கட்சிகளுக்கான பங்கீடு முடிவடைந்து ஒப்பந்தம் கையெழுத்தானது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் கருணாநிதி இன்று பேச்சுநடத்தினார். அதைத் தொடர்ந்து அவர்களுக்கான தொகுதிப் பங்கீடு முடிவடைந்தது.அதன்படி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 13 தொகுதிகள் ஒதுக்கீடுசெய்யப்பட்டன. இதற்கான ஒப்பந்தத்தில், மாநிலச் செயலாளர் வரதராஜனும்,கருணாநிதியுடம் கையெழுத்திட்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வரதராஜன், தொகுதிப் பங்கீடு திருப்தி தருகிறதுஎன்றார்.

இதையடுத்து இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர்காதர்மொஹைதீன், செயலாளர் சையத் சத்தார் ஆகியோர் கருணாநிதியை சந்தித்துதொகுதிப் பங்கீட்டுக்கு இறுதி வடிவம் கொடுத்தனர். அதைத் தொடர்ந்துஉடன்பாட்டில் கருணாநிதியும், காதர் மொஹைதீனும் கையெழுத்திட்டனர்.

அதன்படி, இக்கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. முஸ்லீம் லீக் கட்சிஉதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடவுள்ளது. அதாவது, திமுகவேட்பாளர்களாகவே அவர்கள் போட்டியிடுவார்கள்.

இதன் மூலம் தற்போது காங்கிரஸ் உள்பட நான்கு கட்சிகளுடனான திமுகவின்தொகுதிப் பங்கீடு முடிவுக்கு வந்துள்ளது. பாமக மட்டுமே தற்போது பாக்கி உள்ளது.இதுகுறித்து திமுக தலைவர் கருணாநிதியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது,பாமகவுக்கான தொகுதிப் பங்கீடு நாளை காலை முடிவுக்கு வரும். சுமூகமாகவேமுடியும்.

தொகுதிப் பங்கீடு முடிவடைந்தவுடன் திமுக போட்டியிடும் தொகுதிகளின்எண்ணிக்கை குறித்து தானாகவே தெரிய வரும்.

தொகுதிப் பங்கீட்டில் தியாக மனப்பான்மையுடன் திமுக நடந்து கொண்டுள்ளது.இதற்கு தகுந்த பரிசு கிடைக்கும் என நம்புகிறேன். மத்திய கூட்டணியில் மதிமுகநீடிப்பது குறித்து எனது கருத்தை காங்கிரஸ் கட்சியிடம் தெரிவித்து விட்டேன் என்றார்கருணாநிதி.

இதுவரை மடிந்துள்ள தொகுதிப் பங்கீட்டின்படி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதொகுதிகளின் எண்ணிக்கை விவரம்:

காங்கிரஸ் - 48

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - 13

இந்திய கம்யூனிஸ்ட் -10

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் - 3

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+