திமுகவுடன் இணைகிறது கண்ணப்பனின் கட்சி!
சென்னை:
முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன் நடத்தி வரும் மக்கள் தமிழ் தேசம் திமுகவுடன்இணைகிறது. இதற்கான பிரமாண்ட விழா சென்னையில் நடைபெறுகிறது.
இந் நிலையில் திமுகவுடன் இணைவதை எதிர்த்து அக்கட்சியின் சில நிர்வாகிகள்மறுமலர்ச்சி மக்கள் தமிழ் தேசம் என்ற புதிய கட்சியைத் தொடங்கியுள்ளனர்.முந்தைய ஜெயலலிதா ஆட்சியில் முக்கிய இலாகாக்களை வகித்து முக்கியத்துவம்வாய்ந்த அமைச்சராக விளங்கியவர் கண்ணப்பன். பின்னர் ஜெயலலிதா ஆட்சிபோனதும், இவர் அதிமுகவிலிருந்து விலகினார்.
கடந்த சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக மக்கள் தமிழ் தேசம் என்ற பெயரி ல்கட்சிதொடங்கினார். கடந்த தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார்.ஆனால் மயிரிழையில் தோல்வியைத் தழுவினார்.
இந்தத் தேர்தலிலும் திமுக அணியில் இடம்பெற்று சீட் கேட்டிருந்தார். ஆனால்இம்முறை ஜாதிக் கட்சிகளுக்கு கூட்டணியில் இடம் இல்லை என்று கருணாநிதிதிட்டவட்டமாக கூறி விட்டதால், என்ன செய்வது என்று கண்ணப்பன் யோசித்தார்.
பேசாமல் கட்சியை திமுகவுடன் இணைத்து விடுவது என்ற முடிவுக்கு வந்தார்.இதையடுத்து வரும் 14ம் தேதி கட்சியின் பொதுக்குழுவை கண்ணப்பன்கூட்டியுள்ளார். அப்போது கட்சி இணைப்பு குறித்து தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.அதன் பிறகு சென்னையில் நடைபெறும் பிரமாண்ட விழாவில் திமுக தலைவர்கருணாநிதி முன்னிலையில் கட்சியை திமுகவுடன் இணைக்க முடிவுசெய்யப்பட்டுள்ளதாம்.
தேர்தல் நேரத்தில் தனது கட்சியில் ஒரு கட்சி இணைவது பூஸ்டாக அமையும் எனகருணாநிதி கருதுகிறார். இதனால் இணைப்பை மகிழ்ச்சியாக ஒப்புக்கொண்டுவிட்டார். திமுகடவுன் கட்சியை இணைக்கும் கண்ணப்பனுக்கு ஒரு சீட்வழங்க கருணாநிதி முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
கட்சி உடைந்தது:
ஆனால், திமுகவுடன், மக்கள் தமிழ் தேசம் கட்சியை இணைப்பதைக் கண்டித்துஅக்கட்சியின் சில நிர்வாகிகள் மறுமலர்ச்சி மக்கள் தமிழ் தேசம் என்ற புதியகட்சியைத் தொடங்கியுள்ளனர்.
ராமச்சந்திர மருதுபாண்டியர், நல்லமணி ராஜாமணி ஆகியோரைஅமைப்பாளர்களாகக் கொண்டு மறுமலர்ச்சி மக்கள் தமிழ் தேசம் என்ற பெயரில் புதுக்கட்சி தொடங்கப்பட்டுள்ளது. இக்கட்சியின் கொடியாக, மேலே கருப்பு, நடுவில்பச்சை (அதன் நடுவே வட்ட வடிவில் வெள்ளை), கீழே சிவப்பு என மூவர்ண கட்சிக்கொடியும் உருவாக்கப்பட்டுள்ளது.
கட்சியின் அமைப்பாளர்கள் இருவரும் தங்களது கட்சி குறித்து செய்தியாளர்களிடம்பேசுகையில், ஒரே ஒரு சீட்டுக்காக கட்சியை, திமுகவுடன் இணைக்க கண்ணப்பன்முடிவு செய்துள்ளார். இதை கட்சியில் உள்ள 80 சதவீதம் பேர் ஏற்கவில்லை.
எனவேதான் புதிய கட்சியைத் தொடங்கியுள்ளோம். செயற்குழுவைக் கூட்டி புதியநர்வாகிகளை தேர்ந்தெடுக்கப் போகிறோம். வரும் சட்டசபைத் தேர்தலில் எங்களைமதித்து, மரியாதையுடன் நடத்தும் கட்சியுடன் கூட்டணி வைப்போம் என்றனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள் தனது கட்சியின் நிர்வாகிகளை கண்ணப்பன் ஒரு கல்யாணமண்டபத்தில் திரட்டி வைத்துக் கொண்டு காத்திருந்தார். முதல்வர் ஜெயலலிதாவின் அழைப்புக்காக.. ஜெயலலிதாஇன்று நம்மைக் கூப்பிடப் போகிறார், நாமெல்லாம் அதிமுகவில் மீண்டும் இணையப் போகிறோம் என்றகணணப்பனை நம்பி நிர்வாகிகள் காத்திருந்தனர்.
ஆனால், கண்ணப்பனை நம்ப வைத்து கழுத்தை அறுத்தது அதிமுக. கண்ணப்பனை கூப்பிடவே இல்லை.அதிலிருந்து மீண்டும் தீவிர ஜெ. எதிர்ப்பு நிலையை எடுத்துவிட்டார் கண்ணப்பன் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications