திருமா வெளியிட்ட பட்டியல்: அதிமுக எரிச்சல்
சென்னை:
விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் அதிமுகவிடம் 14 தொகுதிகளின் பட்டியல்தரப்பட்டு அதிலிருந்து 9 தொகுதிகளை ஒதுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதிமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகளுக்கு 9 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.அந்தத் தொகுதிகள் எவை என்பதை முடிவு செய்ய அதிமுக மற்றும் விடுதலைச்சிறுத்தைகளின் குழுவினருக்கிடையே இன்று பேச்சுவார்த்தை நடந்தது.ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான அதிமுக குழுவும், திருமாவளவன், செல்வப்பெருந்தகை ஆகியோர் அடங்கிய விடுதலைச் சிறுத்தைகள் குழுவும் இந்தப்பேச்சுக்களில் கலந்து கொண்டன.
அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர்வெளியே வந்த திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், எங்களுக்குஒதுக்கப்படவுள்ள 9 தொகுதிகள் எவை என்பது குறித்துப் பேசினோம்.
மொத்தம் 12 தனித் தொகுதிகளின் பட்டியலைக் கொடுத்து அதிலிருந்து 9தொகுதிகளை ஒதுக்கக் கோரியுள்ளோம். நாங்கள் கொடுத்துள்ள தொகுதிகள் விவரம்:மங்களூர், காட்டுமன்னார்கோவில், அரூர், வானூர், தலைவாசல், நன்னிலம், வரகூர்,சீர்காழி, சமயநல்லூர், அவினாசி, அச்சிரப்பாக்கம், அரக்கோணம் ஆகியவை.
அதேபோல கடலூர் அல்லது குறிஞ்சிப்பாடி, சங்கராபுரம் அல்லது மேல்மலையனூர்,நெல்லிக்குப்பம் அல்லது புவனகிரி, திருவிடை மருதூர் அல்லது பாபநாசம் ஆகியபொதுத் தொகுதிகளில் இரண்டை ஒதுக்குமாறு கோரியுள்ளோம்.
புதுவையைப் பொறுத்தவரை நெடுங்காடு, திருபுவனை, ஊசுடு, ஏம்பலம் ஆகியநான்கு தொகுதிகளைக் கொடுத்து 2 தொகுதிகளை ஒதுக்கக் கோரியுள்ளோம்.
முதல்வருடன் ஆலோசனை நடத்திய பின்னர் தொகுதிகள் குறித்த விவரங்களைதெரிவிப்பதாக அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார் திருமாவளவன்.
தொகுதிகள் குறித்து உடன்பாடு எட்டப்படுவதற்கு முன்பே கேட்ட தொகுதிகளின்விவரத்தை திருமாவளவன் வெளியிட்டுவிட்டது அதிமுகவை எரிச்சலடையச்செய்துள்ளது.
மேலும் பரிதியை எதிர்த்து சென்னை எழும்பூர் தொகுதியில் திருமாவை நிற்கக்கோரியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா. ஆனால், மங்களூர் அல்லதுகாட்டுமன்னார்கோவில் தான் தனக்கு நிச்சய வெற்றி தரும் தொகுதிகள் என திருமாநினைக்கிறார்.
இதனால் சென்னையில் போட்டியிட திருமா தயாராக இல்லை. இதனால் தான்கேட்டுள்ள தொகுதிகள் பட்டியலில் எழும்பூரை அவர் குறிப்பிடவும் இல்லை.
ஏற்கனவே பாண்டிச்சேரி விஷயத்தில் அதிமுக-திருமா இடையே பிரச்சனைஏற்பட்டது. பாண்டியில் ஒரே ஒரு தொகுதி தருவதாக அதிமுக கூற, 10 இடங்களில்தனித்துப் போட்டி என்று அறிவித்தார்.
இதையடுத்து என்ன இப்பிடி பண்ணீட்டீங்க என்று திருமாவிடம் சமாதானம் பேசினார்ஓ.பி. இதையடுத்து 2 தொகுதிகளை ஒதுக்குவதாக அறிவித்தார் முதல்வர் ஜெயலலிதாஎன்பது நினைவுகூறத்தக்கது.
ஒரே சின்னம்: கமிஷனிடம் கோரிக்கை
இந் நிலையில் சட்டசபைத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளர்களுக்கு ஒரே சின்னம் ஒதுக்க வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல்அதிகாரி நரேஷ் குப்தாவிடம் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த முறை திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். ஆனால் இந்த முறை தங்களது சொந்தசின்னத்திலேயே போட்டியிட திருமாவளவன் முடிவு செய்துள்ளார். கட்சிக்கு தேர்தல் கமிஷனின் அங்கீகாரம் கிடைக்க வேண்டுமானால் ஒரே சின்னத்தில்போட்டியிட்ட 8 பேர் எம்எல்ஏவாக வேண்டும்.
இந் நிலையில் நரேஷ் குப்தாவை திருமாவளவன் சந்தித்துப் பேசினார். அப்போது, எங்களது கட்சி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள கட்சி.எங்களதுவேட்பாளர்கள் அனைவருக்கும் ஒரே சின்னம் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அப்போது குப்தாவிடம் கோரிக்கை வைத்தார் திருமா.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications