இ.கம்யூ போர்கொடி-திமுகவுக்கு புது தலைவலி
சென்னை:
10 தொகுதிகளை மட்டும் ஒதுக்கி தங்களை திமுக குறைத்து மதிப்பிட்டு விட்டதாகஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி பெரும் அதிருப்தி அடைந்துள்ளது.
கூடுதல் தொகுதிகளை ஒதுக்காவிட்டால் தனித்துப் போட்டியிடுவது குறித்துபரிசீலிக்கப் போவதாக அக்கட்சி அறிவித்துள்ளது.சசிகலாவின் சமூகத்தைச் சேர்ந்தவரான இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர்தா.பாண்டியன் ஆரம்பத்தில் இருந்தே திமுக கூட்டணிக்கு மனமுவந்து சரிசொல்லவில்லை.
நல்லகண்ணு, மகேந்திரன் போன்ற தலைவர்கள் தான் அதிமுக கூட்டணி கூடவேகூடாது என்று கூறி அந்தக் கட்சியை திமுகவுடன் கூட்டணி அமைக்க வைத்தனர்.
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளில்முதலில் இந்திய கம்யூனிஸ்ட்கட்சியுடன் தான் உடன்பாடு எட்டப்பட்டது. அக்கட்சிக்கு 10 தொகுதிகள்ஒதுக்கப்பட்டன.
கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் இடம்பெற்றிருந்து.அக்கட்சிக்கு 8 தொகுதிகளை அதிமுக ஒதுக்கியிருந்தது. இதே அளவிலானதொகுதிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் அதிமுக ஒதுக்கியது.
இந் நிலையில் திமுக கூட்டணியில் இம்முறை இடம்பெற்றுள்ள இரு கம்யூனிஸ்ட்கட்சிகளும் தங்களுக்கு இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை ஒதுக்கக் கோரின.
மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இணையாக தங்களுக்கும் தொகுதிகள்வழங்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரியிருந்தது.
இந் நிலையில் தங்களுக்கு 10 தொகுதிகளை மட்டும் வழங்கி விட்டு மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சிக்கு மட்டும 13 தொகுதிகளை திமுக வழங்கியிருப்பது இந்தியகம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள், தொண்டர்களிடையே பெரும் அதிருப்தியைஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக தா.பாண்டியனும் அக் கட்சியின் அதிமுக ஆதரவு எம்எல்ஏவானபழனிச்சாமியும் பயங்கர எரிச்சலில் உள்ளனர். பழனிச்சாமி கூறுகையில்,
எல்லோருக்கும் முன்பாக எங்களைக் கூப்பிட்டு உடன்பாடு செய்து கொண்டு 10தொகுதிகளைக் கொடுத்தார்கள். ஆனால் எங்களுக்குப் பின் வந்த அனைவருக்கும்கூடுதல் தொகுதிகளை ஒதுக்கி எங்களை புறக்கணித்துள்ளார்கள் என்பது வேதனைதருகிறது.
தொண்டர்களின் கோபத்தை எங்களால் சமாளிக்க முடியவில்லை.
இந்த ஒதுக்கீட்டில் எங்களுக்கு திருப்தியே இல்லை. இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும்வழக்கமாக சமமான அளவிலேயே தொகுதிகள் ஒதுக்கப்படுவது வழக்கம்.
ஆனால் இம்முறை சொன்னபடி திமுக நடந்து கொள்ளவில்லை.
மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஏன் 13 தொகுதிகளைக் கொடுத்தீர்கள் என்று நாங்கள்கேட்கவில்லை. எங்களுக்கு மட்டும் ஏன் குறைந்த தொகுதிகளை ஒதுக்கினீர்கள்என்பதுதான் எங்களது கேள்வி.
எங்களுக்கு கூடுதல் தொகுதிகள் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால்தொண்டர்களை எங்களால் சமாளிக்க முடியாது. இதுதொடர்பாக மீண்டும்கருணாநிதியை சந்திக்கும் திட்டம் இல்லை.
ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டு விட்டதால் அதை அப்படியே கடைப்பிடிக்கவேண்டும் என்ற அவசியமும் இல்லை. இது என்ன அவ்வளவு பெரிய ஒப்பந்தமா?முன்பு வைகோ இப்படிப்பட்ட ஒப்பந்தத்தை மீறவில்லையா?
பொதுக்குழுவை சென்னையில் அவசரமாக கூட்டி இதுதொடர்பாகவிவாதிக்கவுள்ளோம். கூடுதல் தொகுதிகளைத் தர திமுக தயங்கினால், தனித்துப்போட்டியிடுவது உள்ளிட்ட முடிவுகளை நாங்கள் எடுக்க வேண்டியிருக்கும்.
எங்களை முதலில் கூப்பிட்டு 10 தொகுதிகளைக் கொடுத்து விட்டு மற்ற கட்சிகளுக்குஅள்ளிக் கொடுத்திருப்பதில் சதி இருப்பதாக நாங்கள் நினைக்க வேண்டியுள்ளதுஎன்றார் பழனிச்சாமி.
தொகுதிப் பங்கீடு தொடர்பாக கருணாநிதியுடன் கையெழுத்துப் போட்டு விட்டுவெளியே வந்தபோதே, மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் அதிருப்தியுடன்தான்செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.
உடன்பாடு திருப்தி அளிக்கிறதா என்று கேட்டதற்கு, அந்த ஆராய்ச்சி எல்லாம்உங்களுக்கு எதற்கு என்றார்.
இந் நிலையில் நல்லகண்ணு, தா.பாண்டியன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் இன்று கூடிஆலோசனை நடத்தினர்.
பொதுக்குழுக் கூட்டத்தில் கூட்டணியில் நீடிப்பதா, தனித்துப் போட்டியிடுவதாஎன்பது குறித்து அவர்கள் முடிவு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் திமுககூட்டணியில் மீண்டும் சலசலப்பு எழுந்துள்ளது.
தா.பாண்டியன் மூலமாக இந்தக் கட்சியை தனது கூட்டணிக்குள் இழுக்க அதிமுகதீவிரமாக முயன்று வருவதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications