கடலில் மேடை போட்டு ஒரு கல்யாணம்!

Subscribe to Oneindia Tamil

பாண்டிச்சேரி:

புதுவையில் கடலில் மேடை அமைத்து நூதன முறையில் கல்யாணம் நடந்தது.

புதுவையைச் சேர்ந்தவர் பிரேமானந்தன் நீச்சல் வீரராவார். இவருக்கும் சத்யப்பிரபாஎன்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயமானது. திருமணத்தை நூதனமாக நடத்தபிரேமானந்தன் விரும்பினார்.

அதன்படி, கடலில் மேடை அமைத்து கல்யாணம் செய்ய அவர் விருப்பம்தெரிவித்தார். இதை பெண் வீட்டாரும், உற்றார், உறவினரும் ஏற்றனர்.

இதையடுத்து புதுவை பழைய துறைமுகம் அருகே கடலில் மிதக்கும் மேடைஅமைக்கப்பட்டு, திருமணத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இன்று காலைதிருமணம் நடந்தது.

வைதீக முறைப்படி புரோகிதர் மந்திரங்களை ஓத சத்யப்பிரபாவின் கழுத்தில் தாலிகட்டி கல்யாணம் செய்து கொண்டார் பிரேமானந்தன். இந்தத் திருமணத்தில் புதுவைபாமக எம்.பி. ராமதாஸ் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு, கடல் மீதுநடந்த திருமணத்தைக் கண்டுகளித்து மணமக்களை வாழ்த்தினர்.

சமீபத்தில், புதுவையில், பெங்களூரைச் சேர்ந்த ஒரு காதல் ஜோடி, காதலர் தினத்தன்று,நடுக் கடலில் படகில் வைத்து கல்யாணம் செய்து கொண்டனர் என்பதுநினைவிருக்கலாம்.

புதுவை என்றாலே புதுமைதானோ?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+