பாமகவுக்கு 31 தொகுதிகள் ஒதுக்கியது திமுக!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

திமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 31 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.இதற்கான உடன்பாட்டில் திமுக தலைவர் கருணாநிதியும், பாமக நிறுவனர்ராமதாஸும் இன்று காலை கையெழுத்திட்டனர்.

திமுக கூட்டணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட்,இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளுக்கு தொகுதிப் பங்கீடு முடிவடைந்துவிட்ட நிலையில் முக்கியக் கட்சியான பாமகவுக்கு மட்டும் இட ஒதுக்கீடு முடியாமல்இருந்து வந்தது.

பாமக 35 தொகுதிகளைக் கேட்டு வந்தது. இதனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடுஏற்படாமல் இழுபறி நீடித்து வந்தது. வழக்கமாக பாமகவுக்கு கொடுத்தது போகத்தான்மற்ற கட்சிகளுக்கு திமுக தொகுதிப் பங்கீட்டை முடிக்கும். ஆனால் இம்முறை அதுஅப்படியே தலைகீழானது.

இந் நிலையில் இன்று காலை பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் ஜி.கே.மணி,எம்.எல்.ஏ. காடுவெட்டி குரு ஆகியோர் அண்ணா அறிவாலயம் வந்தனர்.

அவர்கள் கருணாநிதியை சந்தித்து இறுதிக் கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தினர். இதன்பின்னர் தொகுதிப் பங்கீடு தொடர்பான உடன்பாட்டில் ராமதாஸும், கருணாநிதியும்கையெழுத்திட்டனர்.

அதன்படி, பாமகவுக்கு 31 தொகுதிகளை திமுக ஒதுக்கியுள்ளது. கடந்த தேர்தலில்அதிமுகவுடன் கூட்டணி வைத்துப் போட்டியிட்ட பாமக 27 தொகுதிகளில்போட்டியிட்டு, 20 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

இம்முறை திமுக அணியில் இடம்பெற்று கூடுதலாக 4 தொகுதிகளைப் பெற்றுள்ளது.

உடன்பாடு கையெழுத்தானபோது திமுக தரப்பில் ஆற்காடு வீராசாமி, ஸ்டாலின்,துரைமுருகன், தயாநிதி மாறன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

ராமதாஸ் மகிழ்ச்சியா? இல்லையா?

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ்,

பாமக-திமுக இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது. எண்ணிக்கை என்பது வேறு,எண்ணம் என்பது வேறு. எங்கள் எண்ணம் எல்லாம் அரசியல் நாகரீகமற்ற, அராஜகஜெயலலிதா ஆட்சியை அகற்ற வேண்டும் என்பது தான்.

அதற்காகத் தான் கடந்த நான்கு ஆண்டுகளாக நாங்கள் போராடி வருகிறோம். இந்தஅரசை மாற்றி, மக்கள் நலம் விரும்புகின்ற, அரசியல் நாகரீகம் உள்ள, நல்ல அரசைகலைஞர் தலைமையில், அமைக்க வேண்டும் என்பதே எங்களது எண்ணம்.

எண்ணிக்கையை பொறுத்தவைரை பாமக தியாகம் செய்துள்ளது.அந்த தியாகத்தில்மகிழ்ச்சி இருக்கிறது. மகிழ்ச்சி என்பது வேறு, மன நிறைவு என்பது வேறு.

இன்று காலை கூட சில பத்திரிக்கைகளில் பாமகவுக்கு திமுக அள்ளிக்கொடுத்துள்ளதாக செய்தி வந்தது. நாங்கள் அப்படிச் சொல்ல மாட்டோம். அதேநேரத்தில் கிள்ளிக் கொடுத்தார்கள் என்றும் சொல்ல மாட்டோம் என்றார்.

தொகுதிப் பங்கீடு மன நிறைவைத் தருகிறதா என்று கேட்டதற்கு, கடந்த 4 வருடமாகவிதவிதமாக எழுதி எங்களை குழப்பினீர்கள். இன்று ஒருநாள் மட்டும் நீங்கள்குழம்பிப் போங்கள் என்று கூறிவிட்டு சிரித்தபடியே நடந்த ராமதாஸ்,

தொகுதிப் பங்கீடு திருப்தி தரும் விதமாகவே உள்ளது. 234 தொகுதிகளிலும் இந்தக்கூட்டணி வெற்றி பெறுவது உறுதி என்று பஞ்ச் வைத்துவிட்டுப் போனார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+