நடந்தது நடந்துவிட்டது-வைகோ குறித்து கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அதிமுகவில் மதிமுக சேர்ந்தது தொடர்பாக இனிமேல் எதையும் பேச நான்விரும்பவில்லை. நடந்தது நடந்து விட்டது என்று திமுக தலைவர் கருணாநிதிகூறியுள்ளார்.

திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான மதிமுக தொண்டர்கள்,கருணாநிதி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

அவர்களை வரவேற்று அவர்கள் மத்தியில் கருணாநிதி பேசுகையில், வைகோ பொடாசட்டத்திலே கைதாகி, சிறையிலே இருந்தபோது, தமிழக அரசைக் கண்டித்து சென்னைமயிலை மாங்கொல்லையில் திமுக சார்பில் பிரமாண்ட கூட்டம் நடத்தப்பட்டது.

அதிலே பேசும்போது நான் கூறினேன்; திமுகவும், மதிமுகவும் தனித்தனி கட்சிகளாகிவிட்டன. இரண்டும் இணைவது என்பது இயலாத காரியம். இருப்பினும், மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் எப்படு ஒருங்கிணைந்து, ஒத்தகொள்கையுடன் செயல்படுகின்றனவோ,

அதேபோல எதிர்காலத்தில் கொள்கை அடிப்படையில் திமுகவும், மதிமுகவும்இணைந்து செயல்படும் என பேசினேன். ஆனால் இப்போது வைகோ விலகிச்சென்றது எனக்கு வேதனை தருகிறது.

நடந்தது நடந்து விட்டது. இனிமேல் அதைப் பற்றிப் பேச நான் விரும்பவில்லை.அதைப் பேசுவது அழகல்ல. மேலும் பல மதிமுக தொண்டர்களைக் கொண்டுவருவதாக மாவட்டச் செயலாளர் அன்பரசு கூறினார். அதை நான் ஏற்க மாட்டேன்.

வருகிறவர்கள் தாங்களாக மனமுவந்து வர வேண்டும். அவர்களை வற்புறுத்தியோ,தாட்சன்யம் காரணமாகவோ கூட்டி வருவது நல்லதல்ல, அதை நான் ஏற்கவும்மாட்டேன்.

சுனாமி வந்து விட்டுப் போய் விட்டது. ஆனாலும் தமிழ்நாடு அப்படியேதான்இருக்கிறது. இப்போது அரசியல் சுனாமி வந்து கொண்டுள்ளது. அது என்னதான் கோரதாண்டவம் ஆடினாலும், ஆட்டத்திற்குப் பிறகும் திமுக அப்படியேதான் இருக்கும்,இன்னும் வலுவுடன் என்றார் கருணாநிதி.

கருணாநிதிக்கு சோனியா நன்றி:

இந் நிலையில் தமிழக சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 48 தொகுதிகள்ஒதுக்கியதற்காக கருணாநிதிக்கு, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நன்றிதெரிவித்துள்ளார்.

திமுக-காங்கிரஸ் இடையே ஒப்பந்தம் கையெழுத்தான பின் சோனியா காந்திதொலைபேசியில் கருணாநிதியைத் தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது, காங்கிரஸ் கட்சிக்கு 48 தொகுதிகளை ஒதுக்கியதற்காக நன்றி தெரிவித்துக்கொண்டார்.

மேலும், திருச்சியில் நடந்த திமுக மாநாட்டில் கலந்து கொண்டது போல, சட்டசபைத்தேர்தலுக்கும் அதிக அளவில் பிரசாரம் செய்ய தமிழகம் வரவிருப்பதாகவும் சோனியாதெரிவித்தார் என திமுக வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக நேர்காணல் தொடங்கியது:

இந் நிலையில் திமுக சார்பில் சென்னை மாநகரத்தில் உள்ள 14 தொகுதிகளில்போட்டியிட விரும்பி விண்ணப்பம் அளித்துள்ளவர்களிடம் இன்று காலை முதல்அண்ணா அறிவாலயத்தில் நேர்காணல் தொடங்கியது.

20ம் தேதி வரை இந்த நேர்காணல் நடக்கிறது. முதலில் தென் சென்னை மாவட்டதொகுதிகளில் போட்டியிட விரும்பி சீட் கேட்டவர்களிடம் இன்று நேர்காணல்நடந்தது.

கருணாநிதி தலைமையில் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், ஸ்டாலின்,சற்குணபாண்டியன், பரிதி இளம்வழுதி உள்ளிட்ட தேர்வுக் குழுவினர் முன் விண்ணப்பம்அளித்தவர்கள் ஆஜராகினர். தேர்வுக் குழுவுடன் தென் சென்னை மாவட்ட திமுகசெயலாளர் ஜே.அன்பழகனும் உடனிருந்தார்.

இவர்களைத் தொடர்ந்து வட சென்னை தொகுதிகளுக்குட்பட்டவிண்ணப்பதாரர்களிடம் நேர்காணல் நடந்தது.

நடிகர் நெப்போலியன், உசேன், சைதை கிட்டு உள்பட 175 பேரிடம் நேர்காணல்நடந்தது. இதில் 21 பேர் பெண்கள் ஆவர். நாளை திருவள்ளூர் மாவட்டத்துக்கானநேர்காணல் நடக்கிறது.

நேர்காணல் நடக்கும்போது மனு செய்தவருடன் மாவட்ட, ஒன்றியக் கழக நிர்வாகிகள்தவிர வேறு யாரும் வரக் கூடாது என்று கட்சித் தலைமை அறிவுறுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+