அதிமுக மீது மக்கள் பெரும் நம்பிக்கை: வைகோ

Subscribe to Oneindia Tamil

சங்கரன்கோவில்:

அதிமுக அரசு மீது மக்கள் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என மதிமுக பொதுச் செயலாளர்வைகோ கூறினார்.

அதிமுக கூட்டணியில் சேர்ந்த பின் முதன்முறையாக தனது சொந்த ஊரான கலிங்கப்பட்டிக்கு வைகோ சென்றார்.வழியில் பல இடங்களிலும் அவருக்கு கட்சியினரும் அதிமுகவினரும் சிறப்பான வரவேற்பளித்தனர்.

கலிங்கப்பட்டியில் நுழைந்தபோது ஊர் எல்லையில் அவருக்கு மேள தாஙத்துடன் வரவேற்பளிக்கப்பட்டது.

வரவேற்புக்கு நன்றி தெரிவித்து வைகோ பேசுகையில்,

அரசியலில் புதிய திருப்பம் ஏற்பட்ட நிலையில் நான் இங்கு வந்துள்ளேன். மதிமுக தொண்டர்களின்உணர்வையும் மக்களின் உணர்வுகளையும் மதித்துத் தான் அதிமுகவுடன் கூட்டணி வைத்தேன்.

கடும் விமர்சனங்கள், வசைபாடுகள் குறித்து நான் கவலைப்படவில்லை. உங்களுக்கு கட்டணிக்கான காரணத்தைவிளக்க வேண்டியது என் கடமை. ஜதி-மதத்துக்கு அப்பாற்பட்டு கலிங்கப்பட்டி மக்கள் வாழ்ந்து வருகிறோம்.

என் சொந்த ஊரில் நான் இதுவரை அரசியல் பேசியது கிடையாது. அதிமுக-மதிமுக கூட்டணியின் பின்னணிகுறித்து கேள்விகள் கேட்கிறார்கள். இது திடீர் முடிவு என்கிறார்கள். இதில் ஒளிவுமறைவு ஏதுமில்லை.

எந்தக் கூட்டணிக்காக நான் பாடுபட்டேனோ அந்தக் கட்சியின் தொலைக்காட்சி (சன் டிவி) என்னை இருட்டடிப்புசெய்தது. ஆனால், இப்போது விழுந்து விழுந்து என்னைக் காட்டுகிறார்கள். அவர்கள் செய்த பாவத்துக்குபரிகாரமாகவே அதைச் செய்வதாக நினைக்கிறேன்.

கலைஞரை நான் தனியாக சந்தித்தபோது 30 தொகுதிகள் கேட்டேன். 25 தருவதாக சொன்னார். ஆனால் அதிலும்என்னை ஏமாற்றிவிட்டு திருச்சி மாநாட்டில் 22 தொகுதிகள் தான் என்று அறிவித்தார்.

திருச்சியில் என் கட்-அவுட்டை உடைத்தார்கள், எரித்தார்கள். அதை மதிமுக சகித்தது. நாங்கள் சகிப்புத்தன்மைஉடையவர்கள். நான் ஊருக்கு வரும்போதல்லாம் மக்களிடம் அரசியல் நிலவரம் கேட்பேன்.

அதிமுக மீது மக்கள் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அதற்குக் காரணம் தமிவகத்தில் சாதிச்சண்டை, சமயச் சண்டை இல்லை, கலவரம் இல்லை. உழவர் பாதுகாப்பு, இலவச சைக்கிள் என்று பல நல்லதிட்டங்களை ஏழை, எளியவர்களுக்கு நிறைவேற்றியுள்ளது அதிமுக.

அதிமுக இரு கரம் நீட்டி எங்களை வரவேற்றது. இது வெற்றிக் கூட்டணி. இந்தத் தேர்தலில் 234 தொகுதிகளிலும்என் பிரச்சார வியூகம் இருக்கும். 220 தொகுதிகளை அதிமுக கூட்டணி கைப்பற்றும் என்றார்.

இந் நிலையில் மதிமுகவின் பொதுக் குழுக் கூட்டம் நாளை அம்பத்தூர் அருகே உள்ள வானகரத்தில் ஒருகல்யாண மண்டபத்தில் நடக்கிறது.

அதிமுக கூட்டணி அமைய காரணமாக அமைந்த அவைத் தலைவர் எல்.கணேசன் இதற்கு தலைமை தாங்குகிறார்.வைகோ உள்ளிட்ட பொதுக் குழுவினர் பங்கேற்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+