சிறுநீரக கோளாறு-மருத்துவமனையில் ஆதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறைவாசம் அனுபவித்து வரும் மோசடி மன்னன்ஆதிகேசவனுக்கு சிறுநீரக கோளாறு ஏற்பட்டு சென்னை அரசு மருத்துமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Aadhi Kesavanஅவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வெளிநாட்டு வங்கிகளில் கடன் வாங்கித் தருவதாகக் கூறிநூற்றுக்கணக்கானவர்களிடம் கோடிக்கணக்கில் பண மோசடி செய்த ஆதி கேசவன்போலீஸில் சிக்கினார். பின்னர் அவர் மீது பல்வேறு வழக்குகள் போடப்பட்டன.

குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழும் ஆதி கைது செய்யப்பட்டார். சென்னை மத்தியசிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆதி கேசவனுக்கு ஏற்கனவே சர்க்கரை வியாதி,சிறுநீரக கோளாறு ஆகியவை உள்ளன.

இந் நிலையில் ஆதி கேசவனுக்கு சிறுநீரக பிரச்சனை ஏற்பட்டது. உடல் நலம்பாதிக்கப்பட்ட அவர் உடனடியாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குக்கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்துவருகின்றனர்.

அவருக்கு கண் பார்வையிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ரத்தக் கொதிப்பும் அதிகமாகஉள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஆதி கேசவனின் உடல் நலம் தேறி வருவதாக டாக்டர்கள்தெரிவித்துள்ளனர். ஆதி மீது மொத்தம் 42 வழக்குகள் போடப்பட்டுள்ளன என்பதுகுறிப்பிடத்தக்கது. ஒரு வழக்கிலும் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+