15 சீட் தர்றோம்: இ.கம்யூவுடன் அதிமுக பேரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

10 தொகுதிகள் மட்டும் தரப்பட்டதால் திமுக கூட்டணியில் அதிருப்தியுடன் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைஇழுக்க அதிமுக தீவிரமாக முயன்று வருகிறது.

அந்தக் கட்சிக்கு 15 இடங்கள் தருவதாக அதிமுக உறுதியளித்துள்ளது.

இந் நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியத் தலைவர்களில் ஒருவரான டி.ராஜாவுக்கு ராஜ்யசபா சீட்தருவதாகவும் இப்போதைக்கு 10 இடங்களுடன் அட்ஜஸ்ட் செய்து கொள்ளுமாறும் அக் கட்சியின் மூத்ததலைவர்களான நல்லகண்ணு, மகேந்திரன் ஆகியோரிடம் திமுக தலைவர் கருணாநிதி உறுதிமொழியளித்துள்ளார்.

ஆனால், திமுகவிடம் கூடுதலாக சில இடங்களை வாங்கியே ஆக வேண்டும் என கட்சியின் மாநிலச் செயலாளர்தா.பாண்டியன் கூறி வருகிறார்.

தனது சமூகத்தைச் சேர்ந்த அவரை வளைக்க சசிகலாவும், உளவுத்துறையின் மூத்த அதிகாரியொருவரும்தீவிரமாக முயன்று வருகின்றனர்.

இதற்கிடையே திமுகவும் கூட்டணிக் கட்சிகளுக்காக ஏகப்பட்ட இடங்களை தியாகம் செய்துவிட்டு நிற்பதால்மேற்கொண்டு அவர்களை அனத்துவது சரியில்லை என நல்லகண்ணு, மகேந்திரன் ஆகியோர் கூறுகின்றனர்.

அதே நேரத்தில் தொகுதிகளைப் பெறும்போது வெற்றி வாய்ப்புள்ள 10 தொகுதிகளைத் தர வேண்டும் எனதிமுகவுக்கு நிபந்தனை விதிக்கலாம் என்ற நிலையில் அவர்கள் உள்ளனர்.

இந் நிலையில் தீவிர ஜெயலலிதா எதிர்ப்பாளரான ராஜாவும் நேற்று சென்னை வந்தார். கட்சியின் மூத்ததலைவர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார். நாளை அக் கட்சியின் செயற்குழு மீண்டும் கூடுகிறது.

இக் கூட்டம் முடிந்த பின் கருணாநிதியை சந்தித்துப் பேசுவது என்றும் அந்தக் கட்சியின் மூத்த நிர்வாகிகள்திட்டமிட்டுள்ளனர். அப்போது அந்தக் கட்சிக்கு ஒரு இடத்தை திமுக ஒதுக்கவும் வாய்ப்புள்ளதாகக்கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+