அதிமுக வேட்பாளர் பட்டியலுக்கு பூஜை: வைகோ ஜாதகம் பார்த்த போயஸ்

Subscribe to Oneindia Tamil

திருவெற்றியூர்:

அதிமுக வேட்பாளர் பட்டியலை முதல்வர் ஜெயலலிதாவும் சசிகலாவும் திருவொற்றியூர் வடிவுடையம்மன்கோவிலில் வைத்து பூஜை செய்யவுள்ளதாகத் தெரிகிறது.

இதையடுத்து கோவிலில் உளவுப் பிரிவினரும் லோக்கல் போலீசாரும் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிக்கஆரம்பித்துள்ளனர்.

அதிமுக வேட்பாளர் பட்டியலில் முதல் லிஸ்ட் தயாராகிவிட்டதாகத் தெரிகிறது. நேர்காணல் எல்லாம் இனிமேல்தான் என்றாலும் லிஸ்ட் ரெடியாகிவிட்டதாகக் கூறப்படுகிறது.

சில நாட்களுக்கு முன் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்றார் சசிகலா. கையில் ஒரு பேப்பருடன்.கோவிலுக்கு வந்த சசிகலாவை பய பக்தியோடு அழைத்துச் சென்றனர் நிர்வாகிகள்.

இதையடுத்து கையில் இருந்த பேப்பரை அம்மனின் பாதத்தில் வைத்து பூஜை செய்தார் சசிகலா. அந்த பேப்பரில்இருந்தது அதிமுக வேட்பாளர்களின் முதல் லிஸ்ட் தான் என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்.

இந் நிலையில் அடுத்த லிஸ்டான, இறுதிப் பட்டியலும் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்தப் பட்டியலை வரும் 13ம்தேதியன்று (அன்று நிறைந்த அமாவாசை) அதிகாலையில் திருவொற்றியூர் கோவிலில் வைத்து ஜெயலலிதாவும்சசிகலாவும் பூஜை செய்ய இருப்பதாகத் தெரிகிறது.

2001ம் ஆண்டு தேர்தலின்போதும் வேட்பாளர் பட்டியலை ஜெயலலிதா இங்கு வைத்து பூஜை செய்த பின்னரேஅறிவித்தது நினைவுகூறத்தக்கது.

1991ம் ஆண்டு முதல்வரானதும் இந்தக் கோவிலுக்கு வெள்ளிப் பிரம்பை ஜெயலலிதா வழங்கியதும்குறிப்பிடத்தக்கது.

ஜாதகம் பார்க்கப்பட்ட வைகோ:

இதற்கிடையே வைகோவுக்கு 35 இடங்களை ஒதுக்குவதற்கு முன் அவரது ஜாதகத்தை தங்களது ஆஸ்தானஜோதிடரான கேரளத்துக்கு பணிக்கரிடம் தந்து ஜெயலலிதாவும் சசிகலாவும் ஜோசியம் பார்த்ததாகக்கூறப்படுகிறது.

அவர் சொன்ன யோசனைப்படி தான் வைகோவுக்கு 35 சீட்கள் ஒதுக்கப்பட்டனவாம். வைகோவின் ராசி எண் 8என்பதால் அந்த வகையிலேயே சீட் தருமாறு சொன்னாராம். அப்படித் தந்தால் தான் இரு தரப்புக்கும் ஒர்க் அவுட்ஆகும் என்றாராம்.

இதைத் தொடர்தே தங்களது ராசி எண்ணான 9ஐ ஒதுக்கிவிட்டு, வைகோவின் ராசிப்படி 8ஐத் தந்தார்களாம்.

நல்லவேளை, பூஜ்ஜியம் தான் ராசியான நம்பர் என்று சொல்லாமல் விட்டாரே.

அதே போல விஜய்காந்தும் தங்கள் கூட்டணிக்கு வருவார் என்று எதிர்பாக்கும் அதிமுக, அவரது ஜாதகத்தையும்அவர் வீட்டில் கேட்டு வாங்கியிருக்கிறதாம்.

கூட்டணி எல்லாம் இல்லை என்று விஜய்காந்த் பேசினாலும், அதிமுகவுக்கு ஆதராவான நிலையை மனைவியும்மச்சான் சுதீசும் எடுத்துள்ளதாகக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+