தேர்தல் விதிமுறையை மீறினாரா ப.சிதம்பரம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை:

திருச்சி திமுக மாநாட்டில் கலந்து கொண்டபோது தேர்தல் நடத்தை விதிமுறைகள்எதையும் நான் மீறவில்லை என மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக பொதுப்பணித்துறைஅமைச்சரும், அதிமுக தேர்தல் பிரிவு செயலாளருமான ஓ.பன்னீர்செல்வம் தேர்தல்ஆணையத்திற்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில், நான் உள்ளிட்ட நான்கு மத்திய அமைச்சர்கள் தேர்தல் நடத்தைவிதிமுறைகளை மீறி திருச்சி திமுக மாநாட்டில் கலந்து கொண்டதாக புகார்தெரிவித்துள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானது. எனது விமான பயணத்திற்கானகட்டணத்தை என்னுடைய வங்கிக் கணக்கிலிருந்து செக் மூலம் டிராவல் ஏஜென்டுக்குசெலுத்தியுள்ளேன்.

திருச்சியில் நான் தங்கியது தனியார் ஹோட்டலில்தான். அதற்கான பில் தொகையைஎனது கிரெடிட் கார்டு மூலம் செலுத்தியுள்ளேன்.

எந்த அரசு வாகனத்தையும் நான் பயன்படுத்தவில்லை. மத்திய அமைச்சர் என்றமுறையில், எனது பயண விவரங்கள் குறித்து எனது அலுவலகம் தமிழக அரசுக்குமறையாக அனுப்பி வைத்தது.

எனவே தேர்தல் நடத்தை விதிமுறைகளை எந்தக் கட்டத்திலும் நான் மீறவில்லைஎன்பதை தெளிவுபடுத்திக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ப.சிதம்பரம்.

ஆனால் மற்ற மூன்று அமைச்சர்களான தயாநிதி மாறன், ஜி.கே.வாசன், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் அதிமுகவின் புகார் குறித்து இதுவரை விளக்கம் எதையும்கொடுக்கவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+