சாலை விபத்தில் சுப. இளவரசன் படுகாயம்
Subscribe to Oneindia Tamil
சிதம்பரம்:
நீதிமன்ற விசாரணைக்காக போலீஸாரால் அழைத்துச் செல்லப்பட்ட தமிழர்விடுதலைப் படைத் தலைவர் சுப.இளவரசன் சாலை விபத்தில் சிக்கி படுகாயம்அடைந்தார்.
தமிழ் நக்ஸலான சுப. இளவரசன் மீது சிதம்பரம் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில்உள்ளது. இந்த விசாரணையில் அவரை ஆஜர்படுத்துவதற்காக 3 போலீஸ்வாகனங்களில் 11 துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புடன் சுப. இளவரசனைபோலீஸார் சென்னையிலிருந்து சிதம்பரம் கொண்டு சென்றனர்.நீதிமன்ற விசாரணை முடிந்த பின்னர் மீண்டும் சென்னைக்குத் திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது, புதுச்சத்திரம் என்ற இடத்திற்கு அருகே சாலையின்குறுக்கே மோட்டார் சைக்கிள் ஒன்று குறுக்கே புகுந்தது.
இதனால் போலீஸ் ஜீப்பின் டிரைவர் வேகமாக பிரேக்கை போட்டார். இதில் ஜீப்கவிழ்ந்து உருண்டது. இதில் சுப.இளவரசன், 3 போலீஸ்காரர்கள் படுகாயம்அடைந்தனர்.












Click it and Unblock the Notifications