விஜய்காந்தை வளைக்க வைகோ-அதிமுக முயற்சி?
சென்னை:
அதிமுகவுடன் கூட்டு சேர விஜய்காந்துக்கு பல தரப்பில் இருந்தும் நெருக்கடி தரப்பட்டு வருவதாகத் தெரிகிறது.
முதலில் ஒரு பத்திரிக்கை அதிபர் மூலமாக இந்த நெருக்குதல் தரப்பட்டது. ஆனால், அவரிடம் எனக்கு 70 சீட்வாங்கித் தந்தால் அதிமுகவுடன் கூட்டு சேருகிறேன் என்று பேசி ஷாக் கொடுத்து திருப்பி அனுப்பினார்விஜய்காந்த் என்று தகவல்கள் வந்தன.இந் நிலையில் இன்னொரு பத்திரிக்கை அதிபர் மூலமாகவும் விஜய்காந்தை வளைக்க அதிமுக தீவிரமாகமுயன்று வருகிறது.
தொடர்ந்து இந்த இரு பத்திரிக்கை அதிபர்களும் விஜய்காந்துடன் பேசி வருவதாகக் கூறப்படும் நிலையில்,அவரது மனைவி பிரேமலதா, மச்சான் சுதீஷ் ஆகியோருடன் சசிகலாவே தொடர்ந்து பேசிவருவதாகத் தெரிகிறது.
மதிமுக, திருமாவளவன் மட்டும் உடனிருந்தால் வெற்றி அவ்வளவாக உறுதியில்லை என உளவுப் பிரிவினர்தந்துள்ள சர்வே ரிப்போர்ட் காரணமாக, விஜய்காந்தை வளைக்க அதிமுக மிகத் தீவிரமாக உள்ளது.
அதிமுக கூட்டணியால் மதிமுக நிர்வாகிகள் மட்டுமே மகிழ்ச்சியாக உள்ளதாகவும், அடிமட்டத் தொண்டர்களும்,நியூட்ரல் வாக்காளர்களும் மதிமுக மீது வைத்திருந்த மரியாதையை இழந்துள்ளதாகவும் அந்த சர்வேகூறுகிறதாம்.
வழக்கமாக நியூட்ரல் வாக்காளர்களின் ஓட்டு மதிமுகவுக்கு அதிகமாகக் கிடைத்து வந்தது. ஆனால், இப்போதுஅதை மதிமுக பெருமளவில் இழக்கும் என்று தெரியவந்திருப்பது போயஸ் கார்டனை டென்சனாக்கியுள்ளது.
இதனால் விஜய்காந்தை வலை வீசிப் பிடிக்க பல வழிகளிலும் முயற்சி நடக்கிறது.
விஜய்காந்தை வளைக்கும் வேலையை வைகோவிடமும் ஜெயலலிதா தந்திருப்பதாகத் தெரிகிறது. சிலநாட்களுக்கு முன் விஜய்காந்தை தனது வீட்டுக்கு வரவழைத்து வைகோ பேசியதாகவும் தெரியகிறது.
ஆனால், விஜய்காந்த் கட்சியில் உள்ள நிர்வாகிகள் அதிமுக கூட்டணியை விரும்பவில்லை. இதனால் மச்சான்சொல்வதைக் கேட்பதா, நிர்வாகிகள் சொல்வதைக் கேட்பதா என்ற குழப்பத்தில் விஜய்காந்த் உள்ளார்என்கிறார்கள்.
திரைமறைவில் ஏகப்பட்ட விஷயங்கள் நடந்து வருவதைப் பார்த்தால் மதிமுகவை விடவும் அதிகமானதொகுதிகளைத் தந்தால் அதிமுகவுடன் கைகோர்க்க விஜய்காந்த் ரெடியாகிவிடுவார் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications