வரத் துடித்தது பழம்: சொல்கிறது இலை!
சென்னை:
இலை (அதிமுக) இருக்கும் இடத்தைத் தேடி பழம் (பாமக) வரத் துடித்தது. ஆனால், சாட்டை இருக்குமிடத்தைத் தேடி பம்பரம்
சென்னை அருகே திருவொற்றியூரில் நடந்த அதிமுக பொதுக் கூட்டத்தில் துளசிதாஸ் பேசுகையில்,மதிமுக தொண்டர்கள் அனைவரும் ஏதோ கல்யாண வீட்டில் இருப்பது போல படு சந்தோஷமாக உள்ளார்கள். அவர்களுக்கு அம்மா நிம்மதியைக் கொடுத்துள்ளார்.
வைகோ பட்ட காயத்துக்கு அம்மா மருந்து போட்டுள்ளார். பெருமைப்படுத்தியுள்ளார். சாட்டையிடம் பம்பரம் வந்து சேர்ந்துள்ளது.
இலையிடம் பழம் தான் முதலில் வரத் துடித்தது. ஆனால் அம்மாதான் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. அதேபோலத்தான் கம்யூனிஸ்டுகளும் வரத் துடித்தார்கள்.
ஓ பாசிட்டிவ் ரத்தம் எந்த ரத்தத்துடனும் சேரும் என்று வைகோ அன்றே சொன்னார். இன்னொரு நிகழ்ச்சியில் மகாபாரதக் கதையைக் கூறினார். அதில் மாமன் சாலியனுக்கு உரிய மரியாதையைத் தர பாண்டவர்கள் மறுத்தார்கள்.
ஆனால் துரியோதனன், சரியான முறையில் சாலியனை அரவணைத்து, மதித்துத் தன்னுடன் சேர்த்துக் கொண்டான். அதேபோலத்தான் அம்மாவும் என்றார் காளிதாஸ்.
அலையோ அலை என அலைந்து மதிமுகவையும் திண்டிவனத்தையும் திருமாவளவனையும் அதிமுக இழுத்துச்சென்றது காளிதாசுக்குத் தெரியாது போலிருக்கே...


Click it and Unblock the Notifications
