ஜெயலலிதா
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட சீட் கேட்டு விண்ணப்பித்துள்ள வேட்பாளர்களிடம் திமுக தலைவர் கருணாநிதி நடத்திய நேர்காணலில், ஜெயலலிதா என்பவரும் கலந்து கொண்டார்.திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த தொகுதிகளில் போட்டியிட விண்ணப்பம் அளித்துள்ள திமுகவினரிடம் கருணாநிதி தலைமையில் நடந்த இந்த நேர்காணலில் அன்பழகன், ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், பரிதி இளம்வழுதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதில் 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்களில் ஜெயலலிதா என்ற பெயருடைய பெண்ணும் ஒருவர். அவருடைய பெயரைக் கூப்பிட்டதும் வந்திருந்த வேட்பாளர்களிடையே, ஜெயலலிதாவே வந்திருக்காங்கப்பா என்று கூற, சிரிப்பலை எழுந்தது.
ஜெயலலிதாவும் சிரித்தபடியே உள்ளே போனார். வாங்க ஜெயலலிதா சிரித்தபடியே அழைத்த கருணாநிதி அவரிடம் நேர்காணல் நடத்தினார்.
20ம் தேதி வரை இந்த நேர்காணல் நடக்கும்.












Click it and Unblock the Notifications