அதிமுக தாக்குதல்: பாமக எம்எல்ஏக்கள் தப்பினர்
கடலூர்:
பாமக எம்.எல்.ஏக்கள் வேல்முருகன் (பண்ருட்டி), கோவிந்தசாமி(விருத்தாச்சலம்)ஆகியோர் பயணம் செய்த கார் மீது அதிமுகவினர் கடும் தாக்குதல்நடத்தினர். இதில் இரண்டு பாமக எம்.எல்.ஏக்களும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள ஒரு கிராமத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக இரு எம்.எல்.ஏக்களும் காரில் பயணம் செய்துகொண்டிருந்தனர்.அப்போது அவர்களது காரை ஒரு கும்பல் வழிமறித்தது. அவர்கள் கார் மீது பயங்கரதாக்குதல் நடத்தினர்.
ஆனால் கார் டிரைவர் சாதுர்யமாக காரை வேகமாக செலுத்தினார். இதனால் இருஎம்.எல்.ஏக்களும் உயிர் தப்பினர்.
இருப்பினும் காரின் பின் சீட்டில் அமர்ந்திருந்த சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது.அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
தாக்குதலை நடத்தியது அதிமுகவினர் எனக் கூறப்படுகிறது. இச்சம்பவத்தால்கொதிப்படைந்த பாமகவினர், நெய்வேலியில் ரகளையில் இறங்கினர். அதிமுககொடிக் கம்பங்கள் வெட்டி சாய்க்கப்பட்டன. கடைகள் அடைக்கப்பட்டன.
நகரில் பதட்டம் நிலவியது, போலீஸார் அதிக அளவில் அங்கு குவிக்கப்பட்டனர்.தாக்குதல் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அதிமுக பொதுக் கூட்டங்களில் குறிப்பாக நடிகர் ஆனந்தராஜ், வட மாவட்டங்களில்கலந்து கொள்ளும் பிரசாரங்களுக்கு பாமகவினர் இடையூறு கொடுத்து வந்தநிலையில் தற்போது அதே பாணியை அதிமுகவும் கடைப்பிடிக்க ஆரம்பித்திருப்பதுகுறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications