டிக்கெட்: காங் அலுவலகத்தில் திருவிழா கூட்டம்!
சென்னை:
சட்டசபைத் தேர்தலில் போட்டியிட சீட் கேட்டு இன்று முதல் காங்கிரஸ் கட்சியினர்விண்ணப்பம் வழங்கத் தொடங்கியுள்ளனர்.
இதனால் சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமையகமான சத்தியமர்த்தி பவனில்நூற்றுக்கணக்கானோர் திரண்டதால் அங்கு திருவிழாக் கூட்டம் காணப்படுகிறது.திமுக கூட்டணியில் 2வது பெரிய கட்சியாக அங்கீகரிக்கப்பட்டுள்ள காங்கிரஸுக்கு48 தொகுதிகள் தரப்பட்டுள்ளன. இந்தத் தொகுதிகள் எவை என்பது பின்னர்அறிவிக்கப்படவுள்ளது.
இந்த நிலையில் தேர்தலில் போட்டியிட விரும்புகிறவர்கள் இன்று முதல் 17ம் தேதிவரை விண்ணப்பம் வழங்கலாம் என கட்சித் தலைமை அறிவித்தது.
இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.விண்ணப்பங்களை இலவசமாக அளிக்கலாம் என்று கட்சித் தலைமைகூறியிருப்பதால், நூற்றுக்கணக்கானவர்கள் சத்தியமர்த்தி பவனில் குவிந்துவிண்ணப்பங்களை குதூகலமாக அள்ளி வழங்கி வருகின்றனர்.
சத்யமூர்த்தி பவனுக்கு உள்ளேயும் வெளியிலும நூற்றுக்கணக்கான கார்கள்வரிசைகட்டி நின்றன.
காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி விண்ணப்பம் பெறும் பணியைத் தொடங்கிவைத்தார்.
சத்தியமூர்த்தி பவன் தவிர மாவட்ட தலைநகரங்களில் உள்ள காங்கிரஸ்அலுவலகங்களிலும் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.
இதில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் சென்னை ஆர்.கே.நகர்தொகுதியைக் கேட்டும், முன்னாள் எம்.எல்.ஏ செல்லக்குமார் தி.நகர், அண்ணா நகர்,பூங்கா நகர் தொகுதிகளில் ஒன்றை ஒதுக்கக் கோரியும், முன்னாள் எம்.எல்.ஏ. ஜேசிடிபிரபாகரன் வில்லிவாக்கம் தொகுதியைக் கேட்டும்,
விடியல் சேகர் ஈரோடு தொகுதியைக் கேட்டும், எஸ்.எம்.ஹிதாயதுல்லா சேப்பாக்கம்அல்லது துறைமுகம் தொகுதியைக் கேட்டும் இன்று மனு தாக்கல் செய்தனர்.
வரும் 17ம் தேதி வரை மனுக்கள் பெறப்படும் என காங்கிரஸ் தலைமைஅறிவித்துள்ளது. அதன் பின்னர் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வேட்பாளர்தேர்வு நடைபெறும்.
கட்சியில் ஏகப்பட்ட கோஷ்டிகள் இருப்பதால் ஒவ்வொரு கோஷ்டிக்கும் இத்தனைதொகுதிகள் என்று ஏற்கனவே உள் ஒதுக்கீடு முடிந்து விட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications