சென்னையில் 10 தொகுதிகளில் திமுக போட்டி!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் உள்ள 14 சட்டசபைத் தொகுதிகளில் நான்கு தொகுதிகளை கூட்டணிக்கட்சிகளுக்கு வழங்க திமுக முன் வந்திருப்பதாகத் தெரிகிறது.

கூட்டணிக் கட்சிகளுக்கு படு தாராளமாக தொகுதிகளைப் பகிர்ந்து கொடுத்துள்ளதிமுக தலைவர் கருணாநிதி, அடுத்ததாக, கூட்டணிக் கட்சிகளுக்குரிய தொகுதிகளைஒதுக்கும் வேலையில் தீவிரமாக இறங்கியுள்ளார்.

சென்னை நகரில் மொத்தம் 14 தொகுதிகள் உள்ளன. இவை அனைத்துமே திமுகவுக்குசாதகமான தொகுதிகள் தான். ஓரிரண்டைத் தவிர மற்ற தொகுதிகள் அனைத்திலும்பெரும்பாலும் திமுகவே வென்று வருகிறது.

அப்படிப்பட்ட கோட்டையிலிருந்து 4 தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கதிமுக முன் வந்துள்ளதாம். ஒதுக்கப்படும் தொகுதிகள்:

சைதாப்பேட்டை, பெரம்பூர், ஆர்.கே.நகர், பூங்கா நகர்.

இதில் சைதாப்பேட்டை அதிமுகவுக்கும் அவ்வப்போது சாதகமாக வாக்களிக்கக் கூடியசென்னை நகர தொகுதிகளில் ஒன்று. இப்போது அதிமுகவின் ராதாரவி இத்தொகுதிஎம்.எல்.ஏ.வாக உள்ளார்.

எனவே இந்தத் தொகுதியை இப்போது கைகழுவ திமுக முடிவு செய்துள்ளது.வன்னியர்கள் அதிகம் வசிக்கும் இந்தத் தொகுதியை பாமக வலியுறுத்திக் கேட்டுவருவதால் அக்கட்சிக்கு இத்தொகுதி போகிறதாம்.

அடுத்ததாக ஆர்.கே. நகர் தொகுதி. இத்தொகுதியும் திமுகவுக்கு சாதகமானதொகுதிதான். ஆனால், இப்போது அதிமுக வசம் இத் தொகுதி உள்ளது. இங்குபோட்டியிட அதிமுகவிடம் சீட் கோட்டு விஜய டி.ஆர் மனு கொடுத்துள்ளார்.

இந்தத் தொகுதியையும், பூங்கா நகர் தொகுதியையும் காங்கிரஸுக்குத் தர திமுக முடிவுசெய்துள்ளது. பூங்கா நகரில் இப்போது உறுப்பினராக உள்ளவர் காங்கிரஸ் கட்சியைச்சேர்ந்த விநாயகமூர்த்தி.

இவர் பொதுக் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாகப் பேசிகாங்கிரசாரிடம் அடி வாங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல பெரம்பூர் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்குப் போகிறது.இப்போதும் இத்தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதான் எம்.எல்.ஏ.பதவியை தக்க வைத்துள்ளது.

இத்தொகுதிகள் போக மீதமுள்ள 10 தொகுதிகளையும் திமுக தன் வசம் வைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளதாக அறிவால வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த முறை சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதி இம்முறை தொகுதிமாறுகிறார். அவர் திருவல்லிக்கேணி அல்லது துறைமுகத்தில் நிற்பார் என்கிறார்கள்.

துறைமுகம் தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ.அன்பழகன், புரசைவாக்கம்தொகுதிக்கு இடம் பெயருகிறார்.

ஸ்டாலின் ஆயிரம் விளக்கு தொகுதியிலேயே போட்டியிடுவார். அவருடையஅண்ணன் தமிழரசுவும் இத்தேர்தலில் போட்டியிட விரும்புகிறார். ஆனால் அதைகருணாநிதி ஏற்கவில்லையாம்.

அதே போல அழகிரியும் போட்டியிட விரும்புகிறார். அதற்கும் கருணாநிதிஅனுமதிக்கவில்லை. அழகிரியின் மனைவி காந்திக்கு சீட் கொடுக்க பிரஷ்ஷர்வருகிறதாம். கருணாநிதி அதையும் அனுமதிக்க மாட்டார் என்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+