துரைமுருகனுக்கு எதிராக அலை அலையாய் தந்திகள்
சென்னை:
சட்டசபைத் தேர்தலில் துரைமுருகனுக்கு சீட் கொடுக்கக் கூடாது என்று கூறி திமுகதலைமைக்கு 200க்கும் மேற்பட்ட தந்திகள் வந்து குவிந்துள்ளதால் கட்சித் தலைமைஅதிர்ச்சி அடைந்துள்ளதாம்.
திமுகவின் முன்னணித் தலைவர்களில் ஒருவர் துரைமுருகன். கருணாநிதியின் மிகநெருங்கிய சீடர்களில் ஒருவர். அவரது செல்லப் பிள்ளைகளில் ஒருவாககருதப்படுபவர்.அப்படிப்பட்ட துரைமுருகனுக்கும் கருணாநிதிக்கும் இடையே சமீபத்தில் மோதல்மூண்டது. வேலூர் மாவட்ட திமுகவில் தனக்குப் போட்டியாக ஒருவரை ஸ்டாலின்கொம்பு சீவி விட்டுவருவதாக கோபமடைந்த துரைமுருகன் அதைபிரச்சனையாக்கினார்.
இதையடுத்து ஸ்டாலின்-துரைமுருகன் இடையே மோதல் ஏற்பட தேர்தல் தொடர்பானமுக்கியக் குழுக்களில் துரைமுருகனுக்கு இடம் கிடைக்கவில்லை.
இதைத் தொடர்ந்து இரு தரப்பிலும் சமாதானக் கொடி ஏற்றப்பட்டது. இப்போதுகூட்டணிக் கட்சிகளுடன் கருணாநிதி பேசும்போது துரைமுருகனும் உடனிருக்கிறார்.
இருந்தாலும் துரைமுருகன் தொடர்பான பூசல்கள் ஓயவில்லை என்பதைவெளிக்காட்டும் விதமாக அவருக்கு எதிராக நூற்றுக்கணக்கான தந்திகள் வேலூர்மாவட்டத்திலிருந்து கருணாநிதிக்கு அனுப்பப்பட்டுள்ளதாம்.
காட்பாடி தொகுதியின் எம்.எல்.ஏவான துரைமுருகன், கடந்த முறை திமுக ஆட்சியில்இருந்தபோது அமைச்சராக இருந்தார்.
ஆனால் இம்முறை துரைமுருகனுக்கு காட்பாடியிலோ அல்லது வேலூர்மாவட்டத்திலோ எங்குமே சீட் தரக் கூடாது என்று கூறி வேலூர் மாவட்ட திமுகவினர்200க்கும் மேற்பட்ட தந்திகளை அனுப்பியுள்ளனர்.
ஆனால் இந்த தந்திகள் கருணாநிதியின் பார்வைக்குப் போகவில்லையாம். தொகுதிப்பங்கீடு தொடர்பாக முக்கிய ஆய்வில் இருக்கும் கருணாநிதி இதைப் பார்த்தால்அப்செட் ஆகி விடுவார் என்பதால் ஆற்காடு வீராசாமியே இவற்றைப் பார்த்துஅப்படியே ஓரம் கட்டி விட்டதாகக் கூறப்படுகிறது.
ஆனால், விவரம் அறிந்த கருணாநிதி தந்திகளை வாங்கிப் பார்த்தாராம்.அனுப்பியவர்கள் குறித்து விசாரித்து வருகிறார் என்கிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications