அரசு ஊழியர் சங்கங்களின் அரசியல்
சென்னை:
தமிழக அரசு ஊழியர் அமைப்புகள் அரசியல் கட்சிகளுக்கு ஆதரவான நிலை எடுத்துள்ளதை தேர்தல் கமிஷன்வன்மையாக கண்டித்துள்ளது.
சமீபத்தில் முதல்வர் ஜெயலலிதா, அதிமுகவின் முழு ஆதரவுடன் நடந்த அரசு ஊழியர்கள் மாநாட்டில்(என்.ஜி.ஓ. சங்க மாநாடு) பேசிய அச் சங்கத்தின் தலைவர் சூர்யமூர்த்தி, அம்மாவின் ஆட்சி தொடர அரசுஊழியர்கள் பாடுபடுவார்கள் என்று பேசினார்,அவரது பேச்சுக்கு பிற எதிர்க் கட்சிகளிடையே கடும் எதிர்ப்புக் கிளம்பியது. அந்த மாநாட்டுக்கு ஆன செலவாகரூ. 11 கோடி தமிழக அரசால் சூர்யமூர்த்தி சங்கத்துக்குத் தரப்பட்டதாகவும் தகவல் வந்துள்ளது.
மாநாட்டு செலவுக்கு ரூ. 11 கோடியா என அதிர்ச்சியடைந்துள்ள தேர்தல் கமிஷன் அது தொடர்பாக அரசுவெளியிட்ட அரசாணையைக் கைப்பற்றி விசாரித்து வருவதாகத் தெரிகிறது.
இந் நிலையில் தமிழக தேர்தல் ஆணையர் நரேஷ் குப்தா இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில்,
அரசு ஊழியர்கள் சங்கங்கள் ஏதாவது ஒரு கட்சிக்கு ஆதரவாக நிலை எடுப்பதும், அதை பகிரங்கப்படுத்துவதும்மிகவும் ஆபத்தானது, துரதிஷ்டவசமானது. இந்தச் சங்கங்கள் நடுநிலை வகிக்க வேண்டும்.
இது தொடர்பாக எழுத்துப்பூர்வமாக புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதையடுத்து சூர்யமூர்த்தி மீது எதிர்க் கட்சிகள் புகார் அளிக்கலாம் என்று தெரிகிறது.
இதற்கிடையே பதற்றமான தொகுதிகளில் வாக்குப் பதிவை முழு அளவில் வீடியோ எடுக்கவும் தேர்தல்ஆணையம் முடிவு செய்துள்ளது. பாதுகாப்புப் பணியில் தமிழக போலீசார் தவிர மத்தியப் படையினரையும்அண்டை மாநில போலீசாரையும் ஈடுபடுத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
