கார்த்திக்குக்கு அதிமுக கதவடைப்பு; சந்தானத்துக்கு சீட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சந்தானம் எம்.எல்.ஏ. தலைமையிலான அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின்பிரிவுக்கு அதிமுக கூட்டணியில் இடம் கிடைத்துள்ளது. அக்கட்சிக்கு ஒரு சீட்ஒதுக்கப்பட்டுள்ளது.

சந்தானம் எம்.எல்.ஏ. தலைமையில் இயங்கி வந்த பார்வர்ட் பிளாக் கட்சியின்தலைவராக நடிகர் கார்த்திக் சில மாதங்களுக்கு முன்பு நியமிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

சந்தானம் தனித்து செயல்பட்டு வந்தார். இதைத் தொடர்ந்து அவரைக் கட்சித் தலைமைபதவியிலிருந்தும், கட்சியிலிருந்தும் நீக்கியது.

ஆனால் அதை ஏற்காத சந்தானம், மதுரை நீதிமன்றத்தில் வழக்கு போட்டு நீக்கத்திற்குஇடைக்காலத் தடை வாங்கினார். இதனால் கார்த்திக் கை வலுவிழந்தது.

சட்டப்படி தற்போது சந்தானம்தான் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தமிழ்மாநில பொதுச் செயலாளராக உள்ளார்.

இந் நிலையில் கார்த்திக்கை சமரசத்திற்கு அழைத்தார் சந்தானம். ஆனால் கார்த்திக்வரவில்லை. அதற்குப் பதில் நேரடியாக ஜெயலலிதாவுடன் பேசி கூட்டணி அமைக்கமுயற்சித்தார். இது தொடர்பாக நடராஜன் மூலமாக பேசிப் பார்த்தார்.

கடும் முயற்சிக்குப் பின்னர் ஜெயலலிதாவை சந்திக்கும் வாய்ப்பு அவருக்குக்கிடைத்தது. சென்னைக்கு வந்த பார்வர்ட் பிளாக் கட்சியின் பொதுச் செயலாளர்பிஸ்வாஸுடன் சேர்ந்து ஜெயலலிதாவை சந்தித்தார் கார்த்திக்.

ஆனாலும் இந்த சந்திப்பின்போது கூட்டணி குறித்து ஜெயலலிதா பேச்சேஎடுக்கவில்லை. சந்தானத்துடன் வாருங்கள் பேசலாம் என்று கூறி திருப்பிஅனுப்பிவிட்டார்.

இதனால் வெறுத்துப் போன பிஸ்வாஸ், தனித்துப் போட்டியிட நாங்கள் தயார் என்றார்.இருந்தாலும் கார்த்திக் மட்டும் அதிமுகவுடன் கூட்டணி கட்சி விரும்புகிறது என்று கூறிவந்தார்.

இந் நிலையில் இன்று சந்தானம் எம்.எல்.ஏ. ஜெயலலிதாவை அவரது போயஸ்தோட்ட இல்லத்தில் சந்தித்தார். சந்திப்பின்போது, சந்தானம் தலைமையிலான பார்வர்ட்பிளாக்-அதிமுக இடையே கூட்டணி உடன்பாடு ஏற்பட்டது.

அந்தக் கட்சிக்கு ஒரு சீட் ஒதுக்குவதாக ஜெயலலிதா அறிவித்தார். இதுதொடர்பானஒப்பந்தத்தில் இருவரும் கையெழுத்துப் போட்டனர்.

சந்தானத்துக்கு வழக்கம்போல் உசிலம்பட்டி தொகுதி ஒதுக்கப்படும் என்று தெரிகிறது.

இந்த ஒப்பந்தம் மூலம் அதிக கூட்டணிக்கு கார்த்திக் வருவதற்கான கடைசி வாய்ப்பும்பறி போய் விட்டதாக கருதப்படுகிறது. கார்த்திக்கு அதிமுக கூட்டணியில் கதவுசாத்தப்பட்டு விட்டது. இதனால் கார்த்திக் திமுக கூட்டணிக்குப் போக வேண்டும்அல்லது விஜய்காந்த், பாஜகவுடன் கைகோர்க்க வேண்டிய நிலையில் உள்ளார்.

ஆனால் பாஜக, விஜய்காந்தைக் கூட கூட்டணிக்குள் இழுக்க அதிமுக முயற்சித்துவருவதால் கார்த்திக் நிலைமை படு மோசமாகியுள்ளது.

இதுவரை மொத்தம் 51 தொகுதிகளை ஜெயலலிதா, கூட்டணிக் கட்சிகளுக்குஒதுக்கியுள்ளார். கூட்டணிக் கட்சிகளும், அவற்றுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிஎண்ணிக்கையும் வருமாறு:

மதிமுக - 35

விடுதலைச் சிறுத்தைகள் - 9

இந்திய தேசிய லீக் - 2

ஐ.என்.டி.யூ.சி. - 2

அகில இந்திய முஸ்லீம் லீக் - 1

வாண்டையாரின் மூவேந்தர் முன்னேற்றக் கழகம் - 1

அகில இந்திய பார்வர்ட் பிளாக் (சந்தானம் பிரிவு) - 1

கூட்டணியில் மேலும் சில உதிரிக் கட்சிகளும் சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+