ஜெயலலிதா தான் எங்கள் பலம்: ராமதாஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஜெயலலிதாவின் கடந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியைப் போல மோசமான ஆட்சிஇந்தியாவில் நடந்ததே இல்லை என்று அரசியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். எனவேஜெயலலிதாதான் எங்களது பலம், அவரது ஆட்சியின் அலங்கோலங்களைமக்களிடம் சொல்லியே வெற்றி பெற்று விடுவோம் என்று பாமக நிறுவனர் டாக்டர்ராமதாஸ் கூறியுள்ளார்.

அவர் அளித்த பேட்டி:

31 தொகுதிகள் கிடைத்திருப்பதில் எங்களுக்கு மகிழ்ச்சியே, திருப்தியாகவும் உள்ளது.அடுத்து தேர்தல் பணிகளைத் தொடங்க வேண்டும். நடந்தது குறித்து பேசிக்கொண்டிருப்பதில் அர்த்தம் இல்லை.

பொதுமக்கள் மத்தியில், ஜெயலலிதா ஆட்சி மீது கடும் அதிருப்தி நிலவுகிறது. கடந்தஐந்து ஆண்டுகளில் இந்தியாவிலேயே மிக மோசமான ஆட்சியைக் கொடுத்தவர்ஜெயலலிதாதான்.

எனவே அவர்தான் எங்களது பிரசாரத்திற்குப் பெரிய பலமாக இருக்கப் போகிறார்.அவரது ஆட்சியின் அலங்கோலத்தை சொல்லியே வாக்கு கேட்போம்.

ஜனநாயக முற்போக்குக் கூட்டணி 234 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெறும்.திமுக தனித்து ஆட்சியமைக்கும். ஒருவேளை பெரும்பான்மை பலம்கிடைக்காவிட்டால் திமுகவுக்கு நாங்கள் வெளியிலிருந்து ஆதரவு தருவோம்.

கூட்டணி ஆட்சி, அமைச்சர் பதவி என எதையும் கோர மாட்டோம். பதவிக்காகநாங்கள் அலையவில்லை.

அதேசமயம், அதிமுகவிலிருந்து ஒருத்தர் கூட சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்படப்போவதில்லை. இது சத்தியம்.

மக்களுக்கு எந்த நல்ல காரியத்தையும் அதிமுக செய்ததாக எனக்கு நினைவில்லை.

கட்டாயக் கல்வி கொடுக்கவில்லை, இலவசக் கல்வியை உறுதி செய்யவில்லை,வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம் அப்படியேதான் உள்ளது. போதியவகுப்பறைகள், தேவையான அளவுக்கு ஆசிரியர்களைக் கூட நியமிக்கத் தவறிவிட்டது இந்த அரசு.

திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகியது வருத்தமாகத்தான் உள்ளது. கடைசிநேரத்தில் முக்கியமான ஒரு கட்சி வெளியேறினால் வருத்தம் இருக்கத்தானேசெய்யும்.

அதேசமயம், இதனால் எங்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படப் போவதில்லை.

இதேபோலத்தான் விடுதைலச் சிறுத்தைகளும். அவர்கள் போனதால் எங்களுக்குபாதிப்பு இருக்கத்தான் செய்யும். ஆனால் வெற்றி வாய்ப்பில் எந்தப் பிரச்சினையும்இருக்காது.

சமூக ஒற்றுமைக்காகவும், நட்புக்காகவும் இருவரும் (ராமதாஸ், திருமாவளவன்) ஒரேகூட்டணியில் இருக்க வேண்டும் என்று விரும்பினோம். ஆனால் அது நடக்கவில்லை.வருத்தம்தான்.

புதுவை குறித்து இன்னும் பேசவில்லை. இருப்பினும் அங்கும் கூட்டணி ஆட்சிக்குநாங்கள் வலியுறுத்த மாட்டோம். எங்களது உரிமைக்குரிய தொகுதிகளை திமுகவிடம்கேட்போம் என்றார் ராமதாஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+