மதிமுகவுக்கு தாவுகிறார் புரசை ரங்கநாதன்?
சென்னை:
ஒவ்வொரு தேர்தலையும் வெவ்றுே கட்சிகளில் இருந்தபடி சந்தித்து சாதனைபடைத்து வரும் புரசைவாக்கம் எம்எல்ஏ ரங்கநாதன் வரும் தேர்தலிலும் தனதுசாதனையைத் தொடருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை புரசைவாக்கம் தொகுதியில் 3 முறை எம்.எல்.ஏவாகத்தேர்ந்தெடுக்கப்பட்டவர் ரங்கநாதன். இத்தொகுதியில் அதிகபட்ச வாக்குவித்தியாசத்தில் ஜெயித்தவர் என்ற பெருமையும் உடையவர்.1996ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஜெயலலிதாவுக்கு இருந்த கடுமையான எதிர்ப்புஅலை காரணமாக 70.61 சதவீத வாக்குகளைப் பெற்று அமோக வெற்றி பெற்றார்.
இதில் விசேஷம் என்னவென்றால் ஒவ்வொரு தேர்தலிலும் ஒரு கட்சியின் சார்பில்நின்று வென்றுள்ளார் ரங்கநாதன். 1989ம் ஆண்டு முதல் முறையாக சட்டசபைத்தேர்தலில் போட்டியிட்டார் ரங்கநாதன்.
அப்போது அதிமுக (ஜெ.) சார்பில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டுத் தோற்றார்.
1991ம் ஆண்டு காங்கிரஸ் வேட்பாளராக நின்று வெற்றி பெற்றார். அடுத்து வந்த1996ம் ஆண்டு தேர்தலில் தமாகா வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
2001ம் ஆண்டு ப.சிதம்பரத்தின் காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை வேட்பாளராக(உதயசூரியன் சின்னத்தில்) போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
வெற்றி பெற்ற பின்னர் திமுகவுக்குத் தாவினார். இப்போது மீண்டும் புரசைவாக்கம்தொகுதியில் நிற்க விரும்பினார். ஆனால் திமுக பொதுச் செயலாளர் அன்பழகன்புரசை தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளதால் புரசைவாக்கம் ரங்கநாதனுக்குகிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் வில்லிவாக்கம் தொகுதியை கேட்டுள்ளார் ரங்கநாதன். ஆனால் அந்தத்தொகுதியை கூட்டணிக் கட்சியான இந்தியக் கம்யூனிஸ்டுக்கு ஒதுக்க கருணாநிதிமுடிவெடுத்துள்ளார்.
ரங்கநாதனுக்கு சீட் கிடைக்காது என்றுதான் திமுக தரப்பில் கூறப்படுகிறது.
இதனால் அப்செட் ஆகியுள்ள ரங்கநாதன் எப்படியாவது தேர்தலில் போட்டியிட்டேஆக வேண்டும் என்ற வேகத்தில் உள்ளார். இதனால் திமுகவிலிருந்து விலகிமதிமுகவில் சேரலாமா என்று அவர் யோசித்து வருகிறாராம்.
காரணம், இதுவரை அவர் போகாத ஒரே கட்சி மதிமுகதான். எனவே மதிமுகவில்சேர்ந்து அன்பழகனை எதிர்த்து புரசைவாக்கத்தில் போட்டியிடலாமா என்று யோசித்துவருகிறாராம் ரங்கநாதன்.
அப்ப அடுத்த தேர்தல்ல எந்தக் கட்சியில இருப்பாரு?
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications