பாஜகவுடன் விஜயகாந்த் ரகசிய பேச்சு?
சென்னை:
பாரதீய ஜனதாக் கட்சியுடன் கூட்டணி வைப்பது தொடர்பாக தேசிய முற்போக்குதிராவிட கழக தலைவர் நடிகர் விஜயகாந்த் ரகசியப் பேச்சு நடத்தி வருவதாகத்தெரிகிறது.
ஆனாலும் இதை விஜயகாந்த் மறுத்துள்ளார்.ஆரம்பத்தில் இருந்தே தனித்துப் போட்டியிடுவோம் என்று விஜயகாந்த் கூறிவருகிறார். ஆனால், அவருடன் கூட்டணி அமைக்க அதிமுகவும் பாஜகவும் தீவிரமாகமுயன்று வருகின்றன.
கோயம்பேட்டில் உள்ள தனது கல்யாண மண்டபத்தை மத்திய நெடுஞ்சாலைத் துறைஇடிக்கப் போவதால் திமுக மீது கடும் கோபத்துடன் உள்ள விஜய்காந்த், அதிமுகவிடம்நெருக்கமாகவே உள்ளார்.
கூட்டங்களில் எல்லாம் தனித்துப் போட்டியிடுவோம் என்று பேசும் விஜய்காந்த்,திமுகவை மட்டும் கடுமையாக விமர்சித்துப் பேசுகிறார். ஆனால் அதிமுகவைதாக்குவதில்லை.
அவரை அதிமுகவுக்கு இழுக்க 2 பத்திரிக்கை அதிபர்கள் மூலம் போயஸ் கார்டன்விடா முயற்சி செய்து வருகிறது. அதே போல சசிகலாவின் அக்காள் மகன் தினகரன்உள்ளிட்ட மன்னார்குடியினரும் இழுப்பு வேலையில் தீவிரமாக உள்ளனர்.
ஆனால், அதிகமான இடங்கள் கேட்டு அவர்களை விஜய்காந்த் மிரட்டி வந்தாலும்,விஜய்காந்தின் மனைவி, மச்சான் ஆகியோர் அதிமுக தரப்புக்குநெருக்கமாகிவிட்டனர்.
ஆனால், தனித்துப் போட்டியிடுவதே நமக்கு நல்லது என கட்சியினரும் நிர்வாகிகளும்ரசிகர்களும் கூறி வருவதால் குழப்பத்தில் உள்ளார் விஜய்காந்த்.
இந் நிலையில் திடீரென்று டெல்லி சென்று திரும்பியுள்ளார் விஜயகாந்த். தனதுகட்சியை தேர்தல் கமிஷனில் பதிவு செய்வது தொடர்பாக அவர் டெல்லி போனதாகக்கூறப்பட்டாலும் அங்கு பாஜக தலைவர்களையும் விஜய்காந்த் சந்தித்துப் பேசிவிட்டுவந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆளுக்குப் பாதி (தலா 117) தொகுதிகளில் போட்டியிடுவது என்று பாஜக தலைகள்யோசனை கூறியதாகத் தெரிகிறது.
தேர்தல் செலவுகளை பாஜக பார்த்துக் கொள்ளுமாம்.
ஆனால், இந்தச் செய்திகளை இதை விஜயகாந்த் மறுத்துள்ளார். இதுகுறித்துகோயம்பேட்டில் உள்ள ஆண்டாள் அழகர் திருமண மண்டபத்தில் உள்ள தனது கட்சிஅலுவலகத்தில், செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
கூட்டணி குறித்து நான் எதையும் முடிவெடுக்கவில்லை. இப்போதைக்கு தனித்துப்போட்டியிடுவது என்பதுதான் எங்களது நிலையாக உள்ளது.
பாஜகவுடன் கூட்டணி தொடர்பாக நான் ரகசியமாக எதையும் பேசவில்லை.டெல்லிக்கு சென்றதற்கான காரணமும் அதுவல்ல. அங்கு பாஜக தலைவர்களை நான்சந்தித்துப் பேசவில்லை.
கூட்டணி தொடர்பாக எனது கட்சியின் முடிவை விரைவில் தெளிவாக அறிவிப்பேன்என்றார் விஜயகாந்த்.
இதன்மூலம் கூட்டணி விஷயத்தில் விஜய்காந்த் இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லைஎன்பது தெள்ளத் தெளிவாகிறது.
இதற்கிடையே விஜய்காந்தோடு பாஜகவையும் கூட்டணிக்குள் இழுக்க அதிமுகமுடிவு செய்துவிட்டதாகத் தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications