வைகோ-திருமா சந்திப்பு: கூட்டணிக்குள் கூட்டணி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கும் விடுதலைச் சிறுத்தைகளுக்கும் தொகுதிகளை ஒதுக்குவதில் சிக்கல்தொடர்ந்து வருவதாகத் தெரிகிறது.

மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 35 தொகுதிகளில் அவர்கள் கேட்கும் தொகுதிகளில் 17யை மட்டுமே தர முடியும்என அதிமுக கூறிவிட்டதாகத் தெரிகிறது. மிச்சமுள்ள 18 தொகுதிகளை நாங்கள் முடிவு செய்து தருவதை மதிமுகஏற்க வேண்டும் என அதிமுக கூறிவிட்டது.

இந்த 18ல் பெரும்பாலான தொகுதிகள் ரிசர்வ் தொகுதிகளாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் மதிமுகபொதுச் செயலாளர் வைகோ குழப்பத்தில் உள்ளார்.

அதே போல விடுதலைச் சிறுத்தைகளுக்கான தொகுதிப் பங்கீட்டிலும் சிக்கல் உள்ளது. அக் கட்சியின் பொதுச்செயலாளர் திருமாவளவன், தனக்கு டாக்டர் ராமதாசுடன் உள்ள நட்புறவை மனதில் கொண்டு பாமகபோட்டியிடும் தொகுதிகளை விட்டுவிட்டு பிற தொகுதிகளைக் கேட்டார். அத்தோடு கேட்ட தொகுதிகளின்பட்டியலையும் பத்திரிக்கைகளுக்கு வெளியிட்டார். இது அதிமுகவை எரிச்சலாக்கியுள்ளது.

நம்மிடம் தந்த பட்டியலை இவர் எப்படி வெளியில் ரிலீஸ் செய்யலாம் என்ற கோபத்தில் இருக்கும் அதிமுகதலைமை, பாமகவுடன் மோதும் வகையில் திருமாவளவனுக்கு சீட்களை ஒதுக்கவுள்ளதாகத் தெரிகிறது. இதனால்திருமாவும் குழப்பத்தில் உள்ளார்.

திருமாவுக்கான தொகுதிகள் பட்டியல் நேற்றே வெளியாகிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. திருமாவே அதைநிருபர்களிடமும் தெரிவித்தார். ஆனால் அவர் நினைத்தபடி பட்டியலை அதிமுக அறிவிக்கவில்லை.

தொகுதிகளைப் பகிர்வதில் அதிமுகவுடன் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில் இன்று வைகோவும் திருமாவளவனும்சந்தித்துப் பேசினர்.

மதிமுக தலைமையகமான தாயகத்தில் இச் சந்திப்பு இன்று நடந்தது. கூட்டண சிக்கல் குறித்து இருவரும்பேசியதாகத் தெரிகிறது. பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது வைகோ கூறுகையில்,

இந்த நாள் எங்களுக்கு மகிழ்ச்சியான நாள். தன்னலமற்ற பொதுத் தொண்டுக்காகவும் பெரியார், அம்பேத்கர்கொள்கைகளைப் பாதுகாக்கவும் வாழ்க்கையை அர்ப்பணித்து போராளியாக வலம் வருபவர் திருமாவளவன்.அவர் எனது கட்சி அலுவகம் வந்ததை பெருமையாக நினைக்கிறேன்.

பாச உணர்வின் சங்கமமாக இந்தச் சந்திப்பு இருந்தது. தமிழக அரசியலில் மிக முக்கியமான கால கட்டத்தில்இருக்கிறோம். மக்கள் நலனுக்காகவும் தமிழகத்தைக் காக்கவும் அதிமுக கூட்டணியில் நாங்கள் இணைந்தோம்.மாற்றார் வட்டாரத்தை எழ முடியாத அளவுக்கு தூக்கி எறியும் இந்தக் கூட்டணி.

அதிமுக மீண்டும் அமைக்கப் போகும் ஆட்சிக்கு மதிமுகவும் விடுதலை சிறுத்தைகளும் அரணாக விளங்கும்.புரட்சித் தலைவியை மீண்டும் முதல்வராக்க சூளுரைத்து களம் செல்வோம் என்றார்.

திருமாவளவன் பேசுகையில்,

தமிழக அரசியலில் இடைவெளியை தீர்மானிக்கும் ஆற்றல் மிக்க தலைவர் புரட்சிப் புயல் வைகோ. இந்தப் புயல்எந்த திசையில் நகர்கிறது என்று பரபரப்பாக எதிர்பார்த்தனர். அது (போயஸ்) தோட்டம் நோக்கி நகர்ந்தது.இப்போது தமிழக அரசியலில் அச்சாக விளங்குபவர் வைகோ.

இது இயற்கையான கூட்டணி. மீண்டும் அம்மா தான் (ஜெயலலிதா) முதல்வராக வேண்டும் என கலைஞரேவிரும்பி இருக்கிறார் என்பது அவர் எங்களை நடத்திய விதமே சொல்லிவிட்டது. அவரது விருப்பத்தைநிறைவேற்றுவதில் அண்ணன்-தம்பிகளான நாங்கள் ஈடுபட்டுள்ளோம்.

அதிமுக கூட்டணி 200 இடங்களில் வெல்லும். மீண்டும் அம்மாவே ஆட்சி அமைப்பார். தமிழர்களுக்கும், ஈழத்தமிழர்களுக்கும், உலகத் தமிழர்களுக்கும் பாதுகாப்பு அரணாக நாங்கள் இருப்போம். தமிழக அரசியலில்நாங்கள் தவிர்க்க முடியாத சக்திகள் என்பதை நிரூபிப்போம் என்றார்.

பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர்கள் தந்தனர். இரு கட்சிகளுக்கும் எந்தெந்த தொகுதிகள் என்பதுமுடிவாகிவிட்டதா என்று கேட்டதற்கு, பேச்சுவார்த்தை நடக்கிறது, சுமூகமாக முடியும் என்றனர்.

எப்போது முடியும் என்று கேட்டதற்கு, முடிந்ததும் சொல்கிறோம் என பதில் தந்தனர்.

(நேற்று தான் தொகுதிகள் கிட்டத்தட்ட ஒதுக்கப்பட்டுவிட்டதாகவும், இன்றோ நாளையோ கூட விடுதலைச்சிறுத்தைகள் பட்டியலை அம்மா அறிவிப்பார் என்றும் திருமா கூறியது நினைவுகூறத்தக்கது. ஆனால், இன்னும்பேச்சுவார்த்தை நடக்கிறது என்று சொல்வதால் பிரச்சனை நீடிப்பது உறுதியாகிறது)

உங்களுக்கு அதிகமான ரிசர்வ் தொகுதிகளை ஜெயலலிதா ஒதுக்கியுள்ளதாகவும் இதனால் நீங்கள் அதிருப்தியில்இருப்பதாகவும் கூறப்படுகிறதே என்று கேட்டதற்கு பதிலளித்த வைகோ,

ரிசர்வ் தொகுதிகளை அதிகம் ஒதுக்கினாலும் மகிழ்ச்சி தான். சமூக நீதி என்பது உதட்டளவில் இல்லாமல்உள்ளத்தளவில் கொண்டிருப்பவர்கள் நாங்கள் என்றார்.

கூட்டணிக்குள் கூட்டணி என்பது போல ஒரு வைகோவும் திருமாவளவனும் மட்டும் தனியாக சந்தித்தித்துப்பேசியுள்ளது அதிமுக தரப்பை நிச்சயம் எரிச்சலாக்கும் என்கிறார்கள். இந்தச் சந்திப்பே அதிமுக தரப்புக்குநெருக்கடி சிக்னலை தரவே நடந்ததாகத் தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+