தேர்தல் பாதுகாப்புப் பணிக்கு ஐ.ஜி. நியமனம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக சட்டசபைத் தேர்தல் பாதுகாப்புப் பணியை மேற்பார்வையிடும் பிரிவின்ஐஜியாக ராஜேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.இதுவரை இவர் சென்னை போலீஸ் தொழில்நுட்பப் பிரிவு ஐ.ஜி.யாக பணியாற்றிவந்தார். இனி தேர்தல் பாதுகாப்புப் பிரிவின் தலைவராக இருப்பார்.
அதே போல சென்னை வடக்கு மண்டல போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு துணைஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா, தேர்தல் பணிப் பிரிவின் எஸ்பியாகநியமிக்கப்பட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்ட எஸ்.பியாக சேஷசாயி நியமிக்கப்பட்டுள்ளார். நாமக்கல்எஸ்.பியாக ஆயுஷ்மணி திவாரி நியமிக்கப்பட்டுள்ளார். திவாரி இதுவரை தலைமைச்செயலக பாதுகாப்புப் பிரிவு துணை கமிஷ்னராக இருந்தார்.
தமிழ்நாடு கமாண்டோ போலீஸ் படை எஸ்பியாக இருந்த சமுத்திரப்பாண்டிபெரம்பலூர் எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications