உயர்நீதிமன்றம்: 9 நீதிபதிகளின் பெயர் பரிந்துரை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பதவிகளுக்கு மேலும் 9 பேரின் பெயர்கள்பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

சென்னை உயர்நீதிமன்றத்தில் (மதுரை கிளையையும் சேர்த்து) மொத்தம் 49 நீதிபதிபணியிடங்கள் உள்ளன. நீண்ட காலமாக பெருவாரியான இடங்கள் காலியாக இருந்தநிலையில் சில மாதங்களுக்கு முன் 19 நீதிபதிகள் நியமிக்கப்பட்டனர்.

இதனால் காலியிடங்களின் எண்ணிக்கை 9 ஆக குறைந்துள்ளது. தற்போது 40நீதிபதிகள் பணியில் உள்ளனர்.

இந் நிலையில் காலியாக உள்ள 9 நீதிபதிப் பணியிடங்களை நிரப்புவதற்கானநடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிஏ.பி.ஷா, 9 பேரின் பெயர்களை மத்திய அரசுக்குப் பரிந்துரைத்துள்ளார்.

வழக்கமாக, நீதிபதிகள் நியமனத்தின்போது அதில் பரிந்துரைக்கப்பட்டவர்களின்பெயர்களுக்கு மாநில அரசும் ஒப்புதல் அளிக்க வேண்டும்.

எனவே தற்போது பரிந்துரை செய்யப்பட்ட

9 பேரின் பெயர்களையும் தமிழக அரசின் ஒப்புதலுக்காக மத்திய அரசு அனுப்பிவைத்துள்ளதாகத் தெரிகிறது.

ஒப்புதல் கிடைத்தவுடன் இந்தப் பட்டியலை மத்திய அரசு உச்சநீதிமன்றத்திற்குஅனுப்பி வைக்கும்.

தற்போது பரிந்துரை செய்யப்பட்டவர்களில் 8 பேர் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள்ஆவர். ஒருவர் மாவட்ட நீதிபதி. அந்த 9 பேரின் விவரம்:

வழக்கறிஞர்கள் கே.எம்.விஜயன், கே.சந்துரு, கே.வி.எஸ்.மூர்த்தி,செல்லப்பாண்டியன், மணிக்குமார், பி.எல்.நாராயணன், ராமசுப்ரமணியன் மற்றும்மாவட்ட நீதிபதியும், உயர்நீதிமன்ற விஜிலன்ஸ் பிரிவு அதிகாரியுமான செல்வம்ஆகியோர்.

இவர்களில் வழக்கறிஞர்கள் விஜயன், சந்துரு இருவரும் பிரபலமான வழக்கறிஞர்கள்.பல முக்கிய வழக்குகளில் இவர்கள் ஆஜராகியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+